பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வள்ளல்கள்

களைப் பாடினர் கபிலரே எனினும், அவை பாரியின் அன்பளிப்பு: வாழ்க அவன் புகழ்!

கபிலர் உயிர்வாழ்வதற்குப் பாரியின் வேண்டுகோளே பன்றி, வேறுசில கடமைகளும் காரணமாம்; மறைந்த பாரிக்கு மகளிர் இருவர் இருந்தனர்; இளமையும், ஈடிலா அழகும் உடையார் மணப்பருவம் எய்திய மங்கையர்; தந்தை பிரிவுத்துயர் தாங்கமாட்டா நொந்த உள்ளத்தினர்; ஆதரவு அற்ற அவர்களுக்கு அருந்துணையாய் இருந்து, அவரைத் தக்கவர்க்கு மணஞ் செய்துவைத்தல், அவர் தந்தை தோழயை தன் கடனே என்று உணர்ந்தார் கபிலர்; அதனுல், அவர்க்கு மணஞ்செய்து மகிழும்வரையில் மண்ணுலகவாழ்வை மறுப்பது கூடாது என மனர் துணிந்தார்.

பாரியை இழந்து பாழ்பட்ட பறம்பில் இருந்து வாழ்தல் இனிக்கூடாது என்று எண்ணி, அவன் மகளிரை யும் அழைத்துக்கொண்டு பறம்பு நீங்கிச் செல்வாராயினர்; பறம்பு நீங்கிச் செல்லும் அவர்கள் பறம்பின் பல்வேறு சிறப்புக்களையெல்லாம் எண்ணி, எண்ணி வருந்தி அழுது கொண்டே சென்றனர். முழுகிலா ஒளிவிடும்.ஒருநாள், அவர்கள் சிற்றார் ஒன்றில், ஒரு சிறிய குடிசைத் திண்ணே யில் இருந்து இளேப்ப்ாறிக் கொண்டிருந்தனர்; அப்போது உப்பு வணிகர், உப்புமூட்டை ஏற்றிய தங்கள் வண்டிகளே வரிசையாக ஒட்டிக்கொண்டு. அவ்வழியாகச் சென்றனர்; வண்டிகள் வரிசையாகச் செல்லும் ஒழுங்கைக் கண்ட பாரி மகளிர் இருவரும், தம் துயர் மறந்து எழுந்தோடினர்; அவ் வீட்டிற்கு முன்னே இடப்பட்டிருந்த குப்பைமீது ஏறி கின்று அவ்வண்டிகளே ஒன்று, இரண்டு என வரிசையாக எண்ணி மகிழ்வாராயினர்; அக்காட்சியை வீட்டுத் திண்ணை 'யில் இருந்த்வாறே கண்ட கபிலர் கண்கள் நீர் கொண்டன; பறம்பு ம்லேயில் பண்டு தாம் கண்ட காட்சியொன்று அவர் மனக்கண்முன் வந்த கின்று அவர் உள்ளத்தைக் கல்க்கிற்று. . * -