பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வள்ளல்கள்

  • * இவர்யார் என்குவை யாயின், இவரே,

ஊருடன் இரவலர்க் கருளித், தேருடன், முல்லேக் கீத்த செல்லா கல்விசைப் படுமணி யானேப் பறம்பிற் கோமான் நெடுமாப் பாரி மகளிர் : யானே தந்தை தோழன் ; இவர் என் மகளிர் ; அந்தணன் ; புலவன் ; கொண்டுவந் தனனே ; யான் தர இவரைக் கொண்மதி. (புறம் : உலக) ஆனல், இருங்கோவேளும் கேளாக் காதன் ஆயினன்; மகளிரை மணக்க அவனும் மறுத்துவிட்டான்; இரு இடங் களில் தம் சொல் ஏற்கப் படாதது காணக் கபிலர் உள்ளம் நாணிற்று. தந்தை இருந்தால், தங்களே மணக்க விரும்பித் தங்கள் பறம்பு நோக்கி வரும் இளவரசர் கூட்டத்தைக் கண்டுகளிக்க வேண்டிய இவர்கள், தங்கள் கால்கடுக்கப் பிற அரசர் அவைக்களம் எறி அவமானப்பட வந்ததே,” என்று வருந்தினர்; இத்தகைய இழிகுணம் மிக்க இளைஞர்க வளிடத்தே இனிச் செல்லேன்; என் சொல், செல்லும் இட மாய், இவர்க்கும் ஏற்ற இடமாய்க் கண்டே செல்வேன் ; அவ்வாறு செல்லும் போதும் யான் மட்டும் தனித்துச் செல்வ்ேனே பல்லாமல், இண்க்கம் அறிவிக்கா அரசர் முன் இவரையும் உடனழைத்துச் செல்லேன் ஆஎன்று முடிவு கொண்டார். அத்தகையான் ஒருவனைத் தேர்ந்து அவன் ஒப்புதல் பெற்று வரும்வரை இவரைத் தக்கார்பால் ஒப் படைத்துச் செல்லுதல் வேண்டும் என்று எண்ணினர் ; மலையமானுட்டுத் திருக்கோவலூர் செந்தண்மை மிக்க அந்தணர் கிறைந்தது என்பதை அவர் முன்னரே அறி வார்; அவர் மலேயமாைேடு வாழ்ந்த காலத்தில் அவ்வந்த னருள் சிலரை அறிந்திருந்தார் ; ஆகவே, பாரி மகளிரை அழைத்துக் கொண்டு திருக்கோவலூர் சென்று, ஆங்கே தமக்குத் தெரிந்த பார்ப்பார் சிலரிடத்தில் அவர் அருமை பெருடிை கூறி, அன்புடன் ஒம்புக” என்று ஒப்படைத்து *விரைவில் மீண்டு வருவேன்; அதுவரை ஆற்றியிருங்கள் 急事 என்று அம் மகளிருக்கும். 3. ஆறுதல் உரைத்து அகன்றார்,