உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரி 67

"மகளிரை மணக்க மறுத்தனர் அரசர் இருவர்; அவர் கள் மறுத்தது, மகளிர் மணத்திற்கேற்ற மங்கையர் அல்லர் என்ரு அன்று; பர்ரியின் பகைவர் பேராசர் மூவ்ர் என்ற அச்சமே அவர்கள் மறுத்ததற்குக் காரணம், அவ் வேந்த ரைக் கண்டு அஞ்சும் ஆண்மையிலா அரசர் எவரும் இவரை மணக்க இசையார்; ஆகவே, அவரைக் கண்டு அஞ்சா ஆண்மையாளர் யாவர் எனத் தேர்ந்து அவர்பால் செல்வதே நன்று ’ என்று எண்ணினர்; தமிழ் நாட்டரசர் அனேவருள்ளும், அவ் வேந்தரைக் கண்டு அஞ்சா ஆற்றல் வாய்ந்தவர் மலையமான் நாட்டு அரசர்களே. அவர்கள் அவரைக் கண்டு அஞ்சாமை மட்டும் அன்று ; அவர்க்குப் படைத்துணே போகும் அளவு பேராற்றலும் வாய்ந்தவராவர். ஆகவே, இம் மகளிரை மணப்பதால் அவர் பகைப்பரே என்ற அச்சம் மலேயர்க்கு உண்டாகாது ; மேலும், மலையர் புலவர்க்கு மதிப்புத் தரும் மாண்பினர் ; ஆகவே, பாரிமகளிரை மணக்கும் மனமும் ம்றமும் ஒருங்கே பெற்றவர் மலைய மன்னர்களே எனத் துணிந்தார். அப்போது அங்காடாண்டிருந்தவர் மலையமான் திருமுடிக் காரியின் மக்கள் இருவர் ; மங்கையர் இருவர் இருப்பதற் கேற்ப, மலையமானுக்கும் மக்கள் இருவர் இருப்பது கண்டு மகிழ்ந்தார்; கபிலர் அவர்களைச் சென்று கண்டார்; தந்தை வாழ் காலத்தில் வந்திருந்தபோது கபிலர் பெருமையை அறிந்தவராதலின், அன்புடன் வரவேற்றனர்; அவர்களி டத்தே தம் உள்ள விருப்பத்தை உணர்த்தினர் கபிலர்; புலவர்வேண்டுவன அறிந்து அளித்துப் புரக்கவல்ல் அவ்வா சிளங்கும்ார்கள், மணங் கொள்” என மங்கையர் இருவரை' அப்புலவர்களே அளிப்பர்ளினின், அதை மறுப்பாரோ? - மலையர் இருவரும் மணவினைக்கு இசைந்தனர்; தன்னுள் ஒன்றில், மலேயர் இருவரை, மகளிர் இருவரும் மணந்தனர்; மகளிர் மன விழாக்கண்டு களித்த கபிலர், அவர் தந்தை பர்ரியின் பிரிவு எண்ணி இரங்கினர்; தம் கடமை இனிது முடிந்ததால் மகிழ்ந்து, மகளிர்பால் விடைபெற்றுச் சென்று, பெண்ணையாற்றின் தென்கரையடைந்து, பாரியை கினேந்து, வடக்கிருந்து,உயிர்விட்டுப் புகழ்ப்ெற்ருர்.