பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வள்ளல்கள்

மகிழ்ந்த பேகன், தன்னைப் போன்றே, அதுவும் குளிரால் நடுங்குகிறது ; ஆகவேதான்் அவ்வாறு ஆடுகிறது. என்று எண்ணினன்; உட்னே, வாடைக்கு அஞ்சித் தான்் அணிந்து வந்திருந்த அழகிய பொன்னடையை அம் மயில்மீது போர்த்திவிட்டு, வாடைவருத்த வருந்தி அரண்மனை அடைந்தான்் ; பேகனின் போருள்திறமும், பெருங் கொடைச்சிறப்பும் விளங்கத் துணைபுரியும் இவ்வரிய நிகழ்ச்சியைப் புலவர் பலரும் பாராட்டிப் பாடுவாராயினர்.

' உடாஅ ; போரா ஆகுதல் அறிந்தும், படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எங்கோ கடrஅ யானைக் கவிமான் பேகன் ' (புறம் : கசக). ' மடத்தகை மாமயில் பனிக்கும் என்றருளிப்

படாஅம் ஈத்த கொடாஅ நல்லிசைக் - கடாஅ யானேக் கலிமான் பேக !' (புறம் : கசகி) கான மஞ்ஞைக்குக் கலிங்கம் கல்கிய அருர்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகன்.' (சிறுபாண் : டு-எ . பேகன் கொடைவளத்தைப் பாராட்டிப் பாடினருள் பரணர் பாடிய பாடல் அவன் கொடைப் பெருமையினைக் குன்றிலிட்ட விளக்கென விளக்கி நிற்கின்றன. நீரற்று வற்றிய குளத்தினும், வித்தி வான் நோக்கும் வயல்களிலும் பெய்து பயனுடையதாகும் மழை, ஒன்றும் விளையாக் களர் கிலத்திலும் பெய்து பயனின்றிக் கழிதலும் உண்டு: இவ்வாறு, பெய்தால் பயனளிக்கும் இடம் இது ; ஆகவே ஈண்டுப் பெய்தல் வேண்டும்; பெய்தாலும் பயனுரு இடம் இது ; ஆகவே ஈண்டுப் பெய்தல் கூடாது என வரை யறுத்துக்கொள்ளாது எல்லா இடத்தினும் பெய்யும் மழையேபோல், பேகனும் இரவலர்தம் தகுதி, தகுதி' யின்மைகளே அறிந்து நோக்கும் அறிவிலனுய்த் தன்பால் வந்து இரப்பார் யாவரேயாயினும் அவர் அனைவர்க்கும் பொருள்கொடுக்கும் புல்லறிவுடையனவன் ; பேகன், இவ் வாறு கொன்டத்தொழிற்கண் அறிவற்றவன் ஆவனே