பக்கம்:சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமுதாயக் காட்சி-2 படம் பிடித்தவர்; பிசிராந்தையார் கண்டது அன்று ஒரு பெரியார் வந்தார். அவர் கபிலர், பரணர் வரிசையைச் சார்ந்த, சங்ககாலச் சான்றோர் களில் சான்றோர். கசடறக் கற்றவர்; கற்றபடி நின்றவர். ஒளி படைத்தக் கண்ணும், தெளிவு பெற்ற மதியும், விநயம் நின்ற நாவும், முழுமைசேர் முகமும் படைத்தவர். நீண்ட நெடுங்காலம் உலக வாழ்வை நுகர்ந் தவர். ஆயினும் நரை, திரை, மூப்பு அவரிடம் நெருங்க அஞ்சிக் கிடந்தன. அவர் ஒரு மாநாட்டில் நுழைந்தார். அங்கு பல சான்றோர்கள் குழுமியிருந்தார்கள். நடமாடும் கண்டதும் பணிவன்புடன் சான்றாண்மையின் ஆற்றலைக் யாவரும் ஒரு சேர எழுந்து நின்று, கைகூப்பி வரவேற்று அமரச் செய் தார்கள்.எதிர்பாராது கிட்டிய வாய்ப்பில் மகிழ்ச்சி பூத்தார்கள். நமது சான்றோருடன் அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.