பக்கம்:சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே" தொல்காப்பியம்-பொருளதிகாரம்- கற்பியல்-192. (இதன் பொருள்: நிறைந்த இல்லற இன்பத்தின் முடிவைக் கண்டதும், அரண்போல் நின்று பேணிக் காக்கும் புதல்வர் புதல்விகளைப் பெற்றதும், அறநெறி வழுவாத உற்றார் உறவினரைக் கொண்டதும், அவர்கள் புடை சூழ நின்றதும் ஆகிய தாம் அனுபவித்து விட்ட குடும்ப வாழ்க்கையின் பயனால்தான் தலைவனும் தலைவியும் சிறந்த உலகப் பணியில் ஈடுபடுகிறார்கள்.] 00