பக்கம்:சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தாங்கி நின்றார்கள். இவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இந்த சுற்றத்தார் அறவழியில் சென்றும், இவர்களைப் புடை சூழ நின்றும், வாழ்வில் வெற்றி கண்டு இறும்பூதெய்தினார்கள். இதற்கும் அடுத்த இறுதித் திட்டப்படியில் ஏறினார்கள். 66 தலைவனும் தலைவியாகவும் வாழ்ந்தார்கள். ஆனால் இல்லறத் துறையில் ஆரஞ்சுப் பழத்தின் கடைசித் துளிச்சாற்றையும் பருகி சுவைத்து அருந்தி விட்டார்கள். புளியம் பழமும் தோலும் போன்ற பக்குவ உள்ளம் அடைந்தார்கள். மக்களும் சுற்ற மும் சூழ்தர வாழ்ந்தார்கள். ஆனால் அவர்களின் ஆசாபாசத்தில் கட்டுண்டு கிடக்கவில்லை. அவர் களுடைய காதலன்பு, மக்களன்பு, உற்றார் உறவினர் அன்பு, ஊரார், நாட்டார், உலகத்தார் என் று பரந்து விரிந்த சமுதாய அன்பாக மலர்ந்தது; மணம் வீசிற்று. உணர்ச்சியால் மனித வர்க்கத்தை ஜீவகோடிகளை அருளற ஆரத்தழுவி, சீரிய ஊழியத்தின் திருவுருவங்களாகக் காட்சியளித்தார்கள். சென்ற கால அனுபவத்தின் விளைவாக, "எம் கடன் உலகுக்குப் பணிசெய்து நிற்பதே" என வாழ்ந்தார்கள். இந்த சாகாவரம் பெற்ற உயர் லட்சியக் குடும்ப வாழ்க்கை உலகு தழுவிய தலைவன் - தலைவி யரை-கண்ட காட்சி வல்லான். சான்றோரிற் சான்றோர் யார்? ஓங்காப் பெரும் புகழ்த் தொல்காப் பியன். அவன் தீட்டிக் காட்டியுள்ள அமர சித்திரம் எங்கே? இதோ: காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு--துவன்றி 7