பக்கம்:சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

. யத்தை விழுங்குகிறார்கள். குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொள்வது போல' இளமைக்கு முயன்று முதுமையை வரவழைத்துக் கொள்கிறார் கள். அகால நரை திரைகளை இன்று நாம் பரக்கக் காண முடியும். நமது நல்லிசைச் சான்றோர் நரை திரையை வென்றவர் அல்லவா? ஆகவே, நரை திரைகளை விலக்க அவர் காட்டும் வழி இயல்பானது-நிலை யானது; என்றும் எங்கும் வெற்றி சூடுவது. நெடு நாள் திரையின்றி வாழவேண்டுமென்று கனவிலும் விரும்பியறியாதவர்களைக் கூட அந் நிலையில் இருத்து வது. எனவே அவர் கண்டதும், காட்டப்போவது மான வழிதான் சாலச் சிறந்த விஞ்ஞான வழி. பெரியார் பதில் நரை திரைக்கு ஆதாரம் கவலை. கவலைக்கு அடிவாரம் சமுதாயச் சூழ்நிலை. குறிப்பிட்ட சமுதாயச் சூழ்நிலை உருவாகி விட்டால், மனிதன் நரை திரை நீங்கி இளமையோடு வாழ முடியும். புராணம், ‘சுவர்க்கத்தில்' நரை, திரை, பிணி, மூப்புக் கிடையாதென்று கற்பனைக் கதை சொல்லு கிறது. 'கவலை துறந்திங்கு வாழ்வதே வீடு' என்று 'மோட்சத்திற்கு' விளக்கம் தருகிறான் பாரதி. நரை திரையிலாமைக்குக் காரணம் கேட்ட சான்றோர்களுக்கு நமது பெரியார் பதிலிறுத்தார்: "என் வாழ்வைக் கவலை துளிகூடத் தொட்டதில்லை" ‘எதனால்?’” “என் வாழ்வோடு, எனது மனைவி, மக்கள், இளையர், அரசன், என் போன்ற சான்றோர் வாழ் வும் குறிப்பிட்ட வண்ணம் இணைந்து, ஒரு சமூகச் 11