பக்கம்:சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சூழ்நிலை எனது சமுதாயச் சூழ்நிலையாக ஒளிவீசிக் கிடக்கிறது. அதனால், அதனால் கலை ஒழிவதெப்படி? "நான் அருள் பழுத்த, இனிமையும் பெருமை யும் வாய்ந்த புனித வாழ்வு வாழ்கிறேன். என் வாழ்க்கைக் துணைவி செறிவும் நிறைவும்', 'செம்மையும் செப்பமும்', 'அறிவும் அருமையும்' மிக்கவள். எனது மக்கள் பெற்றோர்க்கு இன்பம் பயக்கவல்ல அறிவு மிக்கவர்கள். என்னினும் இளையவர்களும் ஏவலர்களும் என் போலும் சண்ணோட்டம் படைத்தவர்கள். என் குறிப் பறிந்து நடப்பவர்கள். என் நாட்டு அரசன் முறையில்லாதன செய்யான். மக்கள் அல்லற்பட்டு ஆற்றாது அழ, ஒருக்காலும் இடம் கொடான். குடிகளை, 'வறிஞன் ஓம்பும், ஓர்சேய் எனக் காத்து' இனிது அரசு செய்கிறான். மேலும் எனது ஊரில் சான்றோராய் விளங்குபவர் பலர். அவர்கள் அறிவு பழுத்து 'அமரருள் உய்க்கும்' அடக்கத்துடன் அருள்படிந்த வாழ்வில் திளைப்பவர்கள். இப்படி, எவ்விடத்தும், யாரிடத்தும் இணக்க மான வாழ்வு கொழிக்குமானால் கவலை திவலையும் கசிய வழியில்லை. மக்கள் நீண்ட நெடுங்காலம் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் எய்தி இளமை இன்பத்தை உளமார உயிரார நுகர முடியும். பல்லாண்டு நரை திரை அணுகாது வாழ முடியும்.' இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தமிழகத்தில் எழுந்த தமிழறிவின் முதிர்ந்த சிறந்த கருத்து இது. புதிய உலகில் முன்னேறும் தமிழக மக்களுக்கு, ஒளி காட்டி வழிகாட்டும் அந்தப் பெருஞ்சான்றோர் யார்? அவர் பாடிய பாடல் எது? 12 .