பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

மாறுபோல, இவளும் நின் அருள் பெற்று இன்பம் நுகர்வாளாக வேண்டும், என்னும் பொருள்படப் புலவர் பாடியுள்ளார் என்னும் கருத்து தொனிக்கின்றதன்றோ ?

பரணர் மேற்கொண்ட முயற்சி

பரணர், பேகன் இல்லம் சென்றனர். சென்று செவ்வழிப் பண்ணை யாழில் இசைத்துப் பேகனது மழை தவழ் மலையினைப் பாடி நின்றனர். பேகன் மனைவி கண்ணகி எப்பொழுதும் பேகன் நினைவே நினைவாகக் கொண்டு இணைந்து வாழ்ந்து வந்தனள் ஆதலின், பல நாள் உண்ணாது பட்டினியால் கிடப்பவன் காதில் கஞ்சி வரதப்பா என்றால், எங்கே வரதப்பா?” என்று விரைவது போல, பேகன் என்னும் பெயரை எவர் கூறினும், பேகனைக் காண்க போயினும் அத்திருநாமத்தைச் செப்பியவனையேனும் கண்டு சிறுமகிழ்வு கொள்ளும் நிலையில் இருந்தவள் கண்ணகியாதலின், பரணர் பேகனையும் பேகன் வாழ் மலையினையும் பாடி வந்தபோது வெளியில் வந்தனள். வருகின்றபோதே அவளது நீலநறுநெய்தல் மலர்போலும் மையுண்ட கண்களிலிருந்து நீர்த்துளிகள் நித்திலங்கள் உதிர்வனபோல மார்பகம் நனைய உகுத்த வண்ணம் இருந்தன. பரணர் இத்துயரமுற்ற கோலத்தைக் கண்டனர். கபிலர் போல யாதொரு மொழியையும் கண்ணகியை வினவாது, அடிபெயர்த்து அப்பாற் செல்ல ஒருப்பாடிலர். “இங்ஙனம் இம்மாது அழக்காரணம் என்னவாக இருக்குமோ? அதனை உசாவ வேண்டும்,” என உறுதி கொண்டனர். மெல்ல அம்மாதின் சந்தி