பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

வதனத்தை நோக்கினர். “அம்மணி! நீ யார் ? எம் உழுவல் அன்புடைக் கெழுதகை நண்பன் பேகன் என்பானுக்கும் நினக்கும் உறவுமுறை ஏதேனும் உளதோ ? அவன் பெயரைக் கூறிய மாத்திரையில் இங்ஙனம் உளங் குழைந்து உயங்குகின்றனையே. உண்மை கூறு,” என்று வினயமாக வினவினர். பெரியவர் ஒருவர் பேசுகையில், அவர் விடுத்த வினாவிற்கு விடை இறுக்காது இருத்தல், முறையன்று என்று ஓர்ந்தவளாய், காந்தள் மொட்டுப்போலும் விரலாலே தன் கண்ணீரினைத் துடைத்துக்கொண்டு

அன்பும் அறிவும் சான்ற ஆன்றவரே! யான் எங்ஙனம் எம் கொழுநர்க்கு உறவினள் ஆவேன். யான் உறவினள் ஆயின், அவர் என்னை விடுத்து வேற்றொருத்தியின் பால் வாழ எண்ணியிருப்பரோ? இரார்,” என்று சொல்லாமலே உண்மைச் செய்திகளைச் சொல்லி விட்டனள். இந்த மொழிகளைக் கேட்டதும் பரணர் வருத்தமுற்றனர்; பேகன் செயல் அடாதது என்பதை உணர்ந்தனர்; அப்பேகன் வாழ்ந்த இடத்தை நேரே அடையப் புறப்பட்டனர்; பேகனைக் கண்டனர்; கண்டவற்றை விண்டனர்; பேக! நீ இப்பொழுதே இவணின்று அவண் போந்து அவட்கு அருள் பண்ணுக. இங்ஙனம் பண்ணாயாயின், அது மிகக் கொடிது” என்று இடித்து மொழிந்தனர்.

அந்த அளவில் கூறியும் அமைந்திலர் புலவர். தமக்கு இப்பொழுது பேகன்பால் பரிசில் பெற வேண்டும் என்பது எண்ணம் இல்லை. எப்படியேனும் இவனைக் கண்ணகிபால் சேர்க்கவேண்டும் என்பதே எண்ணமாகும். அதனை வெளிப்படுத்தியும்

சி. ச.-6