உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101


சாதி தருமம் என்பதாயிற்று" என்று விரிவுரை எழுதுகின்றார். ஆதலின், அரசன் செய்வது செங்கோன்முறையாயது. அவன் செய்கையும் மிகையிலா வேந்தன் செய்கையாயிற்று. தன்னை ஒருவன் பழித்தமையையும் ஒரு குற்றம் எனப்பாராட்டாமல் இருப்பது அறமாகலாம். ஆனால், பிறர் பலருக்கு ஊறு செய்தாரது குற்றத்தைக் களையாமல் இருத்தல் குற்றமேயாகும். திருவள்ளுவரைப் பற்றி வழங்கி வருகின்ற கதை ஒன்று இதனை வற்புறுத்துகின்றது. திருக்குறளை ஓதி உணர்ந்த சிறுவன், நாயனார் எழுதியபடி ஒழுகுபவரா என்பதைக் காண வேண்டி ஒரு நாள் அவர் நெய்து கொணர்ந்த ஆடையின் விலையைக் கேட்டான். அவ்விலையறிந்து பின்னர்த் துணியைத் துண்டு துண்டாகக் கிழித்து விலை கேட்டானாம். வள்ளுவனார் பொறுத்திருந்தார். மறுநாள் அச்சிறுவன் நாயனாரின் மனைவியாரை வலிந்து சண்டைக்கு இழுத்துத் தொந்தரவு செய்வது கண்டு நாயனார் அவனை நையப்புடைத்தனராம். சிறுவன்,

“அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.”

என்று இதற்கோ பாடினீர்?" என்று எள்ளி நகையாடினான். வள்ளுவனார்,

“செய்தக்க வல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.”