உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


என்ற குறளைப் படித்ததில்லையோ? தன்னை ஒறுத்தலைப் பொறுக்கலாம். பிறரை ஒறுத்தலை எவ்வாறு பொறுப்பது?" என்றனராம். சிறுவன் நாணித் தலைகுனிந்து சென்றானாம்.

ஆகையால் சம்பந்தர், பகைவர்கள் தமக்கிழைத்த தீமையைப் பாராட்டாமல் இருக்கலாம். பிறர்க்கு அவர்கள் புரிந்த தீமையை எங்ஙனம் பொறுத்தல் கூடும்? ஆதலின், சம்பந்தர் பகைவர்மேல் பகையில்லாமல் இருந்தும், அரசன் கட்டளையைக் கேட்ட பின்னரும் வாளா இருந்தனர் சேக்கிழார். கதைப்போக்கு இது.

புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும்
இகலிலர் எனினும் சைவர் இருந்துவாழ் மடத்திற் றீங்கு
தகவிலாச் சமணர் செய்த தன்மையாற் சாலு மென்ற
மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடா திருந்த வேலை.

என வருதல் காண்க. . திருவருண் மொழித் தேவர் பேராராய்ச்சியாளர்; அருள் பழுத்த நெஞ்சினார்; சம்பந்தரது உள்ள நிலையை நன்கு அறிந்தவர்; "இகலிலர் " என்று எடுத்துக் காட்டுகின்றனர் அன்றோ? திருமுறைகளை நன்கு எழுத்தெண்ணி ஓதிய பெரியாரன்றோ இவர்? வெப்பொழித்தற்கும் திருமுறையிலேயே அகச்சான்றுகள் உள்ளன. ஆதலின், அவற்றை விரித்துரைத்தார். தமக்கு முன்வந்த நம்பியாண்டார் நம்பி கழுவேற்றிய கதையைக் குறித்து வைத்தமையால் அதனையும் கூறவேண்டியதாயிற்று.