உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103


ஆனால்,அவர் திருவருள் திறத்தால் அக்கதையைச் சம்பந்தரது திருவுளக் கிடைக்குத் தக்கவாறு மாற்றிப் பாடுகின்றார். ஈதே அவரது திருவருட்சிறப்பு. அவ்வாறன்றி ஒவ்வொரு பாடலையும் இறைவனே பாடினான் எனக்கொண்டால் சேக்கிழாரை இழித்துரைப்பதாகும். சேக்கிழாரே திருஞான சம்பந்தர் புராணத்தின் இறுதியில்,

“அருந்தமிழாகரர் சரிதை அடியேனுக்கவர் பாதம் தரும்பரிசால்
அறிந்தபடி துதி செய்தேன்.”

எனப்பாடுதல் காண்க.

இவ்வாறு சேக்கிழார் பாடுவதற்கு முன்னோர் காட்டிய வழியும் உண்டு. சம்பந்தர் சமணரோடு வாதிட்டதனை ஒட்டக்கூத்தர் தமது தக்கயாகப் பரணியுள் பாடியுள்ளார். அதனையும் காணல் வேண்டும்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் சைவ அடி-யார்களுடைய வரலாற்றில் தென்னாட்டினர்க்குப் பெரியதோர் ஈடுபாடு தோன்றியது. இந்த அடியார்களெல்லாம் தமிழ் நாட்டிற் பிறந்தவர்கள். திருத்தொண்டத் தொகையில் இவர்கள் பெயரை யெல்லாம் சுந்தரர் கோவை படுத்திப் பாடியுள்ளார். அடியார்களின் வாழ்க்கையைச் சுருக்கமாக நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டத் திருவந்தாதியில் குறித்துள்ளார். இக் குறிப்புக்களை விரித்துப் பெரிய வரலாறாகக் கேட்க மக்கள் மனம் இந்த நூற்றாண்டில் துடிதுடித்-