உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


"வருவானொரு சோழிய வைதிகனாம்
         வந்தாலிவன் மாளிகை வாயில்தனில்
வெருவாது புகுந்து தொடப்பெறுமோ
        மீளச்செழி யன்திரு மேனியையே."

“தண்ணார்மதி யக்கவி கைச்செழியன்
        தனிமந்திரி காண்முனி புங்கவர்ஓர்
எண்ணாயிர வர்க்கும் விடாதவெதுப்
        பிவனால்விடு மென்ப திழித்தகவே.”

என்று சீறிவிழுகின்றார்கள் அமணர்கள். இங்கே உரையாசிரியர் எழுதுங் குறிப்புச்சுவையுள்ளது.

“இதிற் சோழிய வைதிகனென்றது பாண்டிய நாட்டினரைப் பகைத்த நாட்டினன் என்றும் யாகம் பண்ணுபவனென்றும் கூறியவாறு. அமணர் தாங்கள் பெரியராதலிற் சமயப் பொருள் பற்றியல்லாது கோபியாரெனவுணர்க. மீளவென்றது மாளிகை வாயிலிலே புகும் இதனா லேயே தோஷம் போதும்! இதுவன்றிப் பாண்டியனைத் தீண்டுவதேயென்றவாறு.”

“இவர் மேல் சினங்கொள்பவர் அழிந்து போவர்!” என்கின்றார் குலச்சிறையார். இது சிவ தருமமென்றும், இவரென்றது மாகேசுவரர் கோபியாமையை விளக்கி நின்றது என்றும், 'நாணீர் - அறியீர் உறிவல்லமணீர் காணீர்' — நாணீர் என்றது மிருகசாதியோ டொப்பீரென்றவாறு. அறியீரென்றது ஒன்றுமறியீரென்றவாறு. பாவாத்துமா ஆன உணர்வத்தனையே யென்றுமாம். உறிவல்லமணீ ரென்றது குண்டிகைக்குக் கயிற்றுறி பண்ணவல்லீர் என்றவாறு. இது