உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108


பண்ணவா சங்கத்திலும் புக்கீர்? எனலுமாம். காணீர் என்றது 'இனிச் சற்றுப் போதிற் பாரீர்' என்றவாறு," என்பது பழைய உரைக்குறிப்பு.

குலச்சிறையார் அவர்களைப்பார்த்துக் கூறிவிட்டுப் பிள்ளையாரை நோக்கி "சைவ சிகாமணியே திருநீறு நீ யிட்டருள் செய்க" என்று வேண்டிக் கொள்கிறார்.

பிள்ளையார் திருநீறிட்டதும் வெப்புத்தடைபடுகின்றது. பாண்டியன் கீழிறங்கிச் சிம்மாசனத்தின்மேல் பிள்ளையாரை ஏற்றி மனைவியோடும் அமைச்சரோடும் வணங்குகிறான். அமணர்கள் "வெறும் பொடியால் இந்த வெப்புத் தீருமோ? எம்மந்திரமும் எந்திரமும் இல்லை கொலோ? யாம் யாதும் இதற்கு முயன்றிலமோ?" என்று கூறிக் கொதிக்கின்றார்கள்.

“கெடுவீர் கெடுவீ ரிவைசொல் லுவதே
        கெட்டே னடிகள் ளிவர்கே வலரோ
விடுவீர் விடுவீ ரினியென் னெதிர்நீர்
        வெங்கோ பமுமுங் கள்விவா தமுமே”

"நீர்வந்து தொடத்தொட வெந்துருகா
        நெடுவேனில் சுடச்சுட நின்றுலறிக்
கார்வந்து தொடத்தொட வுய்ந்திளகுங்
       காடொத்தனென் யானிவர் கைப்படவே."

என்று பாண்டியன் அவர்களை வேண்டிக்கொள்கிறான்.

அமணர்கள் நெருப்பிலும் நீரிலும் வாதிட வேண்டுகின்றார்கள்.