உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109


“எரியாதன தீயி லிடிற்கொடுபோ
       யெறிவைகையி லேயிடில் வைகையுடன்
சரியாதன ஏடுடை யார்தவமே
       தவமாவது மேலிது சாதனமே”

"வேமேடுடை யாரையும் வைகையிலே
       விட்டாலதன் மீது மிதந்தொழுகிப்
போமேடுடை யாரையும் நீகழுவிற்
      புகுவிப்பது தெக்கண பூபதியே."

என்று தாமே கழுவினைப் பற்றிக் கூறுகின்றார்கள். ("தெக்கணம் - தெற்கு. பூபதி - இராசா. இதற்குப் பொருள் தர்மராசாவும் நீயே யென்று பாண்டியனைப் புகழ்ந்தவாறு. இப்பொருளும் அமணர் சொல்லுதற்குக் காரணம் தாம் கொலை செய்வாரல்லர்; தாம் கற்ற மந்திரவாத வித்தையாற் கொல்லக்கடவராதலாற் சொன்னாரென்க" என்பது பழைய உரை.)

பாண்டிமாதேவியார் கழுவென்று கேட்டதும் திடுக்கிடுகின்றார்; ஞானசம்பந்தர் காலில் விழுந்து சீகாழிக்குத் திரும்பிப் போய் விடும்படி வேண்டிக் கொள்கிறார்.

"மலைகொண்டெழு வார்கடல் கொண்டெழுவார்
         மிசைவந்து சிலாவரு டஞ்சொரிவார்
நிலைகொண்டெழு வார்கொலை கொண்டெழுதற்
         கிவரிற்பிறர் யாவர் நிசாசரரே.
குழைதந்தனை செந்தமிழ் மண்டலமுங்
         கொடிமாநக ருங்குன் றங்களிகூர்
மழைதந்தென வந்தனை வாழியினிப்
         பிரமாபுர மேற மறித்தருளே,"