உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


புலால் தின்று, கடவுளின் பகையின்றி வாழலாம் எனக் கனாக் கண்டனர். மறைமொழி என்பது அழகு நிறைந்த பாட்டு என்பதை மறந்து, அதைச் சொல்வதொன்றாலேயே எவற்றையும் பெறலாம் என முடிவு கட்டினர். மறையோதி, எரியோம்பி, கள்ளுண்டு, புலால் தின்று, உடல் கொழுத்தால், எரியிலெழும் புகையே ஏணியாக மேலுலகை அடைந்து அழகு நிறைந்த இளமங்கையரோடு எந்நாளும் இனிய கள்ளுண்டு களித்துத் திரியலாம் என இறுமாந்தனர். ‘பல் யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி’ எனப் பெயர் புனைந்து கொண்டனர். மலையையும் கடலையும் வணங்கினவர்களும் அழகை மறந்து, அச்சத்திற்காளாய், மாத்தாட் கொழுவிடையும், மறியும் வெட்டி அச்செங்குருதியளைந்த சோற்றோடு தீங்கள் உண்டு வெறியாடத் தொடங்கினர். பல உயிர்களின் செங்குருதியே தமிழ்ப் பேராற்றில் ஓடியது. பொய்யும், புனைசுருட்டும், புலாலும், கள்ளும் பெருமலையாய் எதிர் எழுந்தன; ஆற்றின் ஓட்டத்தைத் தடுத்தன. அறியாமை எனும் இருள் எங்கும் மூடியது.

அது பொழுது புத்தர் என்ற பேரொளி ஒரு புறம் தோன்றியது. மகா வீர‍ர் என்ற பேரொளி மற்றொரு புறம் எழுந்து விளங்கியது. வெறியாட்டமாம் வேள்வியினை இப்பெரியோர் இழித்துப் பேசினர். வருந்தி இறந்த உயிர்களுக்காக இவர்கள் மனம் இரங்கி உருகியது. புலையும் கள்ளும் பெரும் பழி என்றனர். ஒழுக்க நிலையின் சீர்கேட்டைக் கண்டு நல்லொழுக்கமொன்றே