உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

________________


வகை அணுக்களும் மூர்த்தத்திரவியங்கள் அல்லது வடிவுடை அடிப்படைப் பொருள்கள். இவற்றின் கூட்டமே உலகம்; உள்ளது போகாது இல்லது வாராது. தோற்றம் என்பது உள்ளாழ்ந்தது மேல் வந்து மிதப்பதாம். அழிவது என்பது மேல் மிதந்தது புலப்படாது கீழ் ஆழ்ந்து போவதாம். பொருள்கள் எல்லாம் மாறாது நிலைபேறுடையவை. காலத்தைப் பற்றிப் பேசினாலும் காலம் என்பது ஒரு தத்துவம் அன்று; வெறும் வழக்கே ஆம். மேலே கூறிய ஐந்து பொருள்களும் தத்தமக்கு ஏற்ற இயல்புடையவேனும் குணம் என ஒன்றோ காரணம் என ஒன்றோ கொண்டவை அல்ல. இவையே உள்ள பொருள்கள்; காலம், குணம், காரணம் என்பவை வெறும் சொல்லே ஆம். இவர்கள் ஏக தண்டிகளாய் வாழ்ந்தார்கள். குணமிலாதர் (446) குணமில்லர் (5812) குணமிலிகள் (118) குண்டர் குணமிலிகள் (535) என்று தேவாரம் கூறுவது குணம் என்பது ஒரு தத்துவம் அல்லது உள் பொருளாக, இயல்பு அல்லது தன்மையினும் வேறாக இருப்பதனை ஒவ்வாத ஆசீவகக் கொள்கையினைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

ஆசீவகர் என்ற பெயரே இவர்களை இழிவாகக் கருதியவர்கள் இவர்களுக்கு இட்ட பெயர் என்பதனைக் காட்டும். துறவினை வயிற்றுப் பிழைப்பாகக் கைக் கொண்டவர்கள் என்ற இழிவுப்பொருளில், முதலில், பௌத்தர் முதலானோர் இதனை வழங்கினர். மகாவீரர் ஆசீவகர்-