உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

________________


களைப் பழிக்கும் இடம் ஒன்றில் பெண்ணோடு கூடினாலும் துறவி தீங்கொன்றும் செய்தவன் ஆகான் என்பது ஆசீவகர் கொள்கை எனச் சுட்டுகின்றார். நீலகேசி. "அலப்பா தொழியேனிவ் ஆசீவகனை; அருகிருந்தார் தாமறிய ஆசீவகனை (687) என்று கூறுவதும் அதற்கேற்ப அதன் உரை.

"அலப்பா தொழியேன் = அலையா தொழியேன்; அருகிருந்தார் தாமறிய வாசீவகனை = எல்லாரு மறியத் தொழில் செய்து ஜீவிக்கின்றானை. தொழிலாவன : "கர்ப்ப நியாஸ முதலாயின" என்று கூறுதலும் காண்க.

"கரு ஈறிலாப் பித்தர்" என்று சம்பந்தர் பாடுவது (2756) இதனைக் குறிப்பதும் ஆகலாம். "ஒப்பிலாக் கள்ளத்தார்" (3253) என்பதும் இவர்களைக் குறிப்பதோ என ஆராய்தல் வேண்டும். புலைமகன் என்பது மணிமேகலையில் (1391) இத்தகைய கூடா ஒழுக்கத்தானைக் குறிக்கும். "புலையானார்" என்று சம்பந்தர் பாடுவது (2335) இதனையோ?

"தவமறிகிலார் பள்ளியை மெய்எனக் கருதன்மிலன்" (3754)

என்பதும் காண்க. குண்டர் என்பது ஆசிவகரைக் குறிக்கும் என்பதும் ஒன்று. கணிகை நோன்பினர் என ஒருவரைச் சம்பந்தர் குறிக்கின்றார். க்ஷணிக த்யானத்தைக் குறிக்குமானால் இது பௌத்தர்களைச் சுட்டும். துறவியானாலும் பிரமசரியம் காவாது பெண்ணோடு சேர்ந்தொழுகல் ஓர் அறம் எனக் கொள்வர்