பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147

________________


அசோகருடைய கல்வெட்டுக்கள், துறவிகளைக் கண்காணிப்பதற்கு என அசோகன் சிலரை ஏற்படுத்தியதைக் கூறும்போது, ஆசீவகத்துறவிகளையும் குறிக்கின்றன. ஆசீவகர்களுக்குக் குகை ஒன்றும் அவன் தந்துள்ளான். ஆசிவகர் தடிகொண்டு சென்றதால் "தொடித்தலை விழுத்தண்டினார்" என்ற சங்கப் புலவர் ஆசீவகரோ என இதனால் திரு.நீ.கந்தசாமிப் பிள்ளை அவர்கள் கருதுகிறார்."தறியார்" (358) என்று சம்பந்தர் கூறுவது தடிபிடித்த ஆசீவகரையே போலும். ஆனால், "தறி போலாம் சமணர்" (1247) என்றும் கூடவருகிறது. சிலப்பதிகாரத்தில் மாதவி பௌத்தமதத் துறவியாக, கண்ணகியின் தந்தையும் கோவலனின் தந்தையும் சைனத் துறவியும் ஆசீவகத் துறவியும் ஆகின்றார்கள். இப்படி ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொருவராகப் பங்கிடுகின்றார் இளங்கோ அடிகள். மணிமேகலை, சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதையில், சமணர் கொள்கைகளை அறிவதற்கு முன் ஆசீவகக் கொள்கையையே அறிகின்றாள். “வானிடு வில்லின் வரவறியா” எனவரும் நாலடியாரின் அடியையே ஆசீவகத் தலைவனை விளக்கக் குறிப்பிடுவதை நீலகேசியிற் காண்கிறோம். ஆறாவது நூற்றாண்டினரான வராஹமிஹிரர் ஆசீவகர்களைக் குறிக்கின்றார். ஏழாவது நூற்றாண்டில் ஹர்ஷ சரித்திரம் எழுதிய பாணர் மஸ்கரி (ஆசிவகர்) என்ற துறவிகளைப் பற்றிக் கூறுகின்றார். தண்டு எடுத்துச் சென்றதன் காரண மாகத் திருமாலின் அடியாரான துறவி -