பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

________________


களோடு இவர்களும் ஒருவர் எனப் பிறர் மயங்கினர் என்பதனை, வராஹ மிஹிரர் நூலுக்கு உரை எழுதிய பட்டோத் பலர் ஆசீவகர்களை ஏகதண்டிகள் என்றும், திருமால் அடியார் என்றும் கூறுதலால் அறியலாம். இவர்கள் இருப்பிடத்தைக் குக்குட நகர் அல்லது உறையூருக்கு அருகிருந்த சமதண்டம் என்ற ஊராக நீலகேசி கூறும். சிவஞான சித்தியாரும் 13-ஆம் நூற்றாண்டில் ஆசீவக வாதத்தை மறுத்துக் கூறுகிறது.

அம்மணமாய் நின்ற நிலையால் ஒரு சிலர் இவர்களை அமணரோடு மயங்கிய மயக்கத்தை முன்னரே குறித்தோம். ஆசீவகர்கள் என்பது துறவையே வயிற்றுப் பிழைப்புக்கு வழியாகக் கொண்ட போலித் துறவிகளுக்கெல்லாம் பொதுப் பெயராய் வழங்கியதன் காரணமாக அத்தகையார்களைக் கண்காணித்து, ஆசுவ கடமை என்றதொரு வரிவகையினையும் தமிழரசர்கள் பிற்காலத்தே வாங்கி வந்தனர் என 13 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுக்கள் (S.I.I. Vol. I-No. 88,92,108) நமக்குத் தெரிவிக்கின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்து ஆசீவகர் இவ்வாறு பிறரொடு மயங்கி முடிவில் மறைந்தனர் என்று கொள்ளுதல் வேண்டும்.

எனவே சம்பந்தர் பாடல்கள் சமணர்களைப் பழிப்பதாக மட்டும் அமையவில்லை என்று கொள்ளுதல் கூடும். ஏழாம் நூற்றாண்டிற்குப் பின் ஆசீவகர்கள் கொள்கையால் வேறுபட்டுச்