உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149

________________


சிறந்து வாழ்ந்ததாகத் தெரியவில்லை. ஆனால், பழங்கொள்கையை ஆராயும்போது அவர்களைக் குறிப்பிடுவது 13-ஆம் நூற்றாண்டுவரை வழக்கமாக இருந்தது எனலாம்.


VII. குண்டர்


குண்டர் என்றும், குண்டு என்றும் அடிக்கடி சம்பந்தர் பாடுகின்றார். குண்டாக்கன் என்ற சொல்லும் வருகிறது. (1236, 1239, 2657) குண்டாக்கர் என்பதற்குக் "குண்டு ஆக்கையர் என்றவற்றின் வழியே பொருள்காண முற்பட்டுக் குண்டரின் தலைவர் என்று பொருள் கூறுகிறது, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதி. ஆக்கன் என்றசொல்லுக்குக் கற்பனையாகப் படைக்கப்பெற்ற தெய்வம் என்று பொருள் வரும்படியாக "ஈடு " எழுதிச் செல்கின்றது. துறவிகளை முனிவர் என்றும் கடவுளர் என்றும் கொண்டு சைனர்கள் போற்றினர். "முலைமறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள் முறை முறையால் நம் தெய்வம்என்று தீண்டித் தலைபறிக்கும் தன்மை யர்கள்" (6275) என்று திருநாவுக்கரசர், தெய்வம் என்று குறிப்பது "குண்டாக்கர்" என்பதன் கருத்தாகலாம்.

"குண்டன்" என்பதற்கு அகராதி இழிந்தோர்" என்று பொருள் தருகிறது. பெரிய திருமொழி (2,6.5) இதற்கு மேற்கோள். பரத்தமை உடையான் என்ற பொருள் வடமொழி வழியே வரலாம். கண்டி என்பது ஆண்பாலைக் குறிக்-