உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

________________


கும் சொல்லாகத் தொல்காப்பியர் காலத்தில் வழங்கி எருமைக் கடாவினைச் சுட்டியது. இது குண்டு என்றாகி வழங்குகிறது எனக் கொள்ள இடம் உண்டு. குண்டுக் காளை, குண்டுக் குதிரை, —குண்டு எனவும் பிங்கலந்தைபடி வழங்கும்.- குண்டுக் கழுதை முதலியன காண்க. குண்டு, குழி குட்டை முதலியவற்றோடு தொடர்புடையதாய் "இழிதல்" "இழிவு" என்ற பொருளும் தரலாம். எனவே, இப்பொருள்கள் எல்லாம் இச்சொல்லின் குறிப்பாக வருவது இயல்பேயாம்.

குண்டர் என்று எவரையேனும் சிறப்பாகக் குறிக்கின்றனரா சம்பந்தர் என ஆராய்தல் வேண்டும். சாக்கியரையும் சமணரையுமே குறிக்கின்றார் சம்பந்தர் என்பது பொதுவாக உண்மையானாலும் இரண்டுக்கும் மேற்பட்ட கூட்டத்தினரைக் குறிக்கின்ற பாடல்களும் இல்லாமல் இல்லை.

I (1) குண்டர் சாக்கியரும் (3) குணமிலாதாரும்
(3) குற்றுவிட்டுடுக்கையர் தாமும்.
கண்டவாறு உரைத்துக்கால் நிமிர்த்துண்ணும் கையர். (441)

கையர் என்பதற்குக் கையினர் என்று பொருள் கொண்டால் மண்டையாம் ஓட்டினில் அன்றிக் கையிலே உண்ணும் சமணர் என்பது பொருளாம். கையர் என்பதற்குக் கீழானவர் என்று பொருள் கொண்டால் இழித்துரைக்கும்