உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153

________________


III (1) கைய்யில் உண்ணும் கையரும்
                                     (2) கடுக்கள் தின்னும் கழுக்களும்
                                     (3) மெய்யைப் போர்க்கும் பொய்யரும் வேதநெறியை அறிகிலார் (3370)

இங்கே மூவர் உம்மை கொடுத்து வேறு பிரிக்கப் பெற்றுள்ளனர். மெய்யைப் போர்க்கும் பொய்யர் என்பது பௌத்தரைக் குறிப்பதாம். கடுக்கள் தின்னும் கழுக்கள் என்பார் சமணராகலாம். கையில் உண்ணும் கையர் என வஞ்சகராக இகழப்படுவார், ஊணையே கருதி இழிதொழில் செய்து, வயிற்றுப் பிழைப்புக்கு எனத் துறவு பூண்டாரின் ஏமாற்றத்தையே, சம்பந்தர் கருதியதாகக் கொண்டால், சமணரும் புத்தரும் ஒருங்கு சேர்ந்து இகழ்ந்த ஆசீவகர் என்று பொருளாகும். அவ்வாறன்றி அவர்களும் சைனர்களே என்று கொண்டால் உம்மைக்குப் பொருள் இல்லையாம். அப்போது கையரும் கழுக்களும் ஒரு புறமாகவும், பொய்யரும் என்பது மற்றொரு புறமாகவும் அமையும். ஒரு சொல்லுக்குப் பொருளில்லை என்ற கருத்தினும் பொருள் கூறும் கருத்தே வலிவுடைய தாகும்.

உம்மை இல்லாத இடத்திலும் இப்படி இரண்டிற்கு மேற்பட்ட கூட்டத்தார்கள் குறிக்கப்படுகிறார்கள் என்று கொண்டு ஆராயலாம்.

IV (1) மசங்கற் சமண் (சமணர்) (2) மண்டைக்கையர் (பௌத்தர்) (3) குண்டக் குணமிலிகள் (117)

குண்டராவார் வயிற்றுப் பிழைப்புக்காக