உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

________________


உடலை வளர்த்துக் கூடாஒழுக்கம் மேற்கொண்ட கொடுந்தொழிலரே என்று கொள்ளலாம். குணமிலிகள் என்பதற்கு நல்ல குணமில்லாதார் என்ற பொருளோடு, குணம் என ஒன்றினை அடிப்படைத் தத்துவமாகக் கொள்ளாதவர் என்ற பொருளும் கொள்ளலாம்.

V (1) அத்தமண் தோய்துவரார் (பௌத்தர்) (2) அமண் (3) குண்டர் யாதும் அல்லது உரை (424)

VI (1) மாசுமெய்யர் (சமணர்) (2) மண்டைத்தேரர் (பௌத்தர்) (3) குண்டர் குணமிலிகள் (535)

மேலே காட்டிய பாடலோடு (117) இஃது ஒத்துள்ளது. குண்டக் குணமிலிகள் என்பது இங்கே குண்டர் குணமிலிகள்என வந்துள்ளது.

VII (1) பாடுடைக் குண்டர் (2) சாக்கியர் (3) சமணர்(818)

VIII (1) குறியில் சமணொடு (2) குண்டர் (3) வண்தேரர் (925)

சமணொடு குண்டர் எனக் குண்டரை வேறு பிரித்திருப்பது காண்க.

IX சாயநின்றான் (1) வன்சமண் (2) குண்டர் (3) சாக்கியர்

X (1) பொன்னியல் சீவரத்தர் (பௌத்தர்) (2) புளித் தட்டையர்
(3) மோட்டமணர் (4) குண்டர் (100)

புளித்தட்டையர் என்பது யார் என விளங்க வில்லை.

XI சடம்கொண்ட சாத்திரத்தார் (பொது)
(1) சாக்கியர் (2) சமண் (3) குண்டர் (1280)

XII (1) மன்மதன் என ஒளி பெறுமவர் (2) மருதமர் வன்மலர் துவருடையவர்களும் (3) மதியில் துன்மதி அமணர்கள் (1340)