உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155

________________


இங்கே காமிகளாய்த் திரியும் குண்டரே முதலில் சுட்டப்படுகின்றார்கள் எனலாம். இல்லையானால், "சமணர்கள் தொடர்வரும், நின்மலர்" எனப் பின் வருவதோடு சேர்த்துச் சிவனையே குறிப்பதாகக் கொள்ளலாம்.

XIII (1) குண்டரும் குணமிலாத (2) சமண் (3) சாக்கியமிண்டர்கள் (162)

XIV (1) குண்டு (2) அமண் (3) துவர்க்கூறை மூடர்

XV கட்டர் குண்டு அமண் தேரர் சீரிலவிட்டர் (1762)

XVI (!) அலையாரும் புனல்துறந்த அமணர் (2) குண்டர் (3) சாக்கியர் (2068)

XVII (1) கையினில் உண்டுமேனி உதிர்மாசர் (2) குண்டர் (3) இடுசீவரத்தின் உடையார் (பௌத்தர்) (2475)

XVIII (1) சாக்கியப் படுவாரும் (2) சமண் படுவார்களும் மற்றும் (3) பாக்கியப்படகிலாப் பாவிகள் (2451)

"மற்றும்" என வருவதால் பின் வருவதனை மூன்றாம் கூட்டம் எனக் கொள்ளல் வேண்டும்; இனி அசை எனக் கொண்டால் முன்னிருவரையும் விளக்குவதே இரண்டாம் அடி எனல் கூடும்.

XIX (1) குண்டர் தம்மொடு (2) சாக்கியர்
(3) சமணரும் குறியினில் நெறிநில்லா மிண்டர் (603)

குண்டரை "ஒடு"க்கொடுத்துப் பிரித்துச் சாக்கியர் சமணரினும் வேறாகச் சுட்டுதல் காண்க.

XX (1) சீறுலாவிய தலையினர் (2) நிலையிலா அமணர்கள் (3) சீவரத்தர் (2757)

சீறுலாவிய தலையினர் என்பார் யார்? சிறுமைவிளங்கும் தலையினராம் அமணரேயோ? அவர் போன்ற ஆசீவகரா? படிந்து நில்லாமல் சீறிக்கொண்டு நிற்கும் சடைத்தலையரோ?