உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


தட்டும் கையேந்தித் தடுக்கைக் கையிலிடுக்கிப் பிச்சக் குடை ஏந்திக் குடமும் சுரையும் வைத்த உறியையும் சுமந்து குறங்காட்டிக் காட்டு மிராண்டிகள் போல வருதல் எல்லார்க்கும் நகையை ஒரு புறமும், வருத்தத்தை மற்றொரு புறமும் விளைக்கும். அதோடு அவ்வுருவினர் தங்கள் தலைமயிரினைக் கண்ணழலப் பறித்தெதிர் நின்றால் நம் மனம் என்ன பதை பதைக்கும்!

VII

தலைபறித்தலையே பேரொழுக்கமாகக் கொண்டாராதலின் அதனைப் பெருவிழாவாகக் கொண்டாடிப் போற்றிப் புனைந்துரைக்கின்றனர் திருத்தக்கதேவர்.

திருந்திய கீழ்த் திசை நோக்கிச் செவ்வனே
இருந்ததோ ரிடிக்குரற் சிங்கம் பொங்கி மேற்
சுரிந்த தன் உளைமயிர் துறப்ப(து) ஒத்தனன்
எரித்தெழும் இளஞ்சுடர் இலங்கு மார்பினான்.

[ஒளி மிக்குத் தோன்றுவதற்குக் காரணமான இளஞ்சுடர் போல் இலங்கு மார்பினான். மயிர் களைதற்கிருந்த பொழுது, திருந்தின கீழ்த் திசையினை நோக்கி நேரே இருந்ததோர் சிங்கம் தன்னுளை (பிடரி)யின் மயிரினைத் துறக்குந் தன்மையை ஒத்தான்.]

அஞ்சுடர் தாமரைக் கையினால் மணிக்
குஞ்சி வெண் படலிகைக் குமரன் நீப்பது
செஞ்சுடர்க் கருங்கதிர்க் கற்றை தேறுநீர்
மஞ்சுடை மதியினுள் சொரிவ(து) ஒத்ததே.