உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


[குமரன் (சீவகன்) தாமரை போலுங் கையினாலே நீலமணி போலுங் குஞ்சியை வாங்கி வெள்ளித் தட்டிலே இடுகின்ற தன்மை, செஞ்ஞாயிற்றினிடத்து உண்டாகிய கருங்கதிர்க் கற்றையை அஞ்ஞாயிறு தான் வாங்கித் தெளிந்த நீர்மையையுடைய மதியிடத்தே இடுகின்ற தன்மை போன்றது.]

மேலே, பெண்கள் தலைமயிர் பறித்தலையும் இவ்வாறே புனைந்துரைக்கின்றார்.

முன்னுபு கீழ்த்திசை நோக்கி மொய்ம்மலர்
நன்னிறத் தவிசின் மேலிருந்த நங்கைமார்
இன்மயிரு குக்கிய இருந்த தோகைய
பன்மயிற் குழா மொத்தார் பாவைமார்களே.

[தவிசினைப் பொருந்தி அதன்மேலே, கிழக்கு நோக்கியிருந்த தாயரிருவரும் (சீவகனின் ஈன்ற தாயும் வளர்ப்புத் தாயும்) அல்லாத மகளிரும் மயிருகுத்தற் கிருந்த மயில் திரளை ஒத்தார்.]

மணியியல் சீப்பிடச் சிவக்கும் வாணுதல்
அணியிருங் கூந்தலை ஒளவை மார்கள் தாம்
பணிவிலர் பறித்தனர் பரமன் சொன்ன நூற்
றுணி பொருள் சிந்தியாத் துறத்தல் மேயினார்.

[இறைவன் கூறிய ஆகமத்தில் துணியும் பொருளைச் சிந்தித்துத் துறத்தலைச் செய்ய மேவினவர் கூந்தலை மணியாலியன்ற சீப்பிட அது பொறாமற் சிவக்கும் நுதலைச் சேர்ந்த கூந்தலை ஆரியாங்கனைகடாம், ஒன்றிற் றாழ்விலராய்ப் பறித்தார்.]