உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


கன்னிய ராயிரர் காய்பொற் கொம்பனார்,
பொன்னியற் படலிகை யேந்திப் பொன்மயிர்
நன்னிலம் படாமை யேந்தியே யடக்கி நங்கைமார்,
தொன் மயிர் உகுத்த நன் மயிலிற் றோன்றினார்.

[அங்ஙனம் பறித்த அழகிய மயிரினைக் கொம்பனாராகிய கன்னியர் ஆயிரவர் பள்ளியில் விழாமற் படலிகையிலே, ஏந்திக் கொண்டு போய் அடக்க அந்நங்கைமார் பழைய மயிரை உகுத்த மயிலிற் றோன்றினர்!]

நறும்புகை நான நாவிக் குழம்பொடு பளிதச் சுண்ணம்,
அறிந்தவர் ஆய்ந்த மாலை அணிந்தபைங் கூந்தல் ஆய் பொன்
நிறந்தரு கொம்பு நீலக் கதிர் கற்றை யுமிழ்வ வேபோற்,
செறிந்திருந் துகுத்துச் செம்பொற் குணக்கொடி ஆயினாரே.

[(சீவகன் மனைவியர்) கற்பகக் கொம்பு. நீலக்கதிர்த் திரளைக் கழிப்பவை போல நாவியினது நானக் குழம்போடே புகையையும், கருப்பூரப் பொடியையும், மாலையையும் அணிந்த கூந்தலை, மனோவாக்குக் காயங்களால் அடங்கியிருந்து, உகுத்து, நற்குணத்தையுடைய செம்பொற் கொடியாயினார்.]

என வரும் சிந்தாமணிச் செய்யுள்களால் இத் திருவிழாவின் பெருமையும் முறையும் நன்கு விளங்கும். மயிலானது பழைய மயிரை உகுத்துப் பொலிவு பெறுவது போல இப் பெண்களும் தலைமயிரை நீக்கி விளங்கினர் எனத் தேவர் புனைந்துரைப்பது காண்க. உலகத் தழகை உள்ளவாறறியும் பாவலர் பெருமானாகிய தேவரே ஒரு கோட்பட்டால் இதனைப் புகழத்