உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42


சிலர் மணிப்ரவாளம் என்ற புதிய நடையை எழுதத் தொடங்கினர். முத்தும் துகிரும் (பவளமும்) சேர்த்துக் கோத்த கோவை போல வடமொழிச் சொற்களும் தமிழ்ச் சொற்களும் செம்பாதியாக விரவிவரத் தொடுப்பதே அந்த நடையாகும். அவர்கள் மந்திரமும் அத்தகையவே. ஐந்தமுதம் என்று புகழப்படுவன.

"ஓம் ணமோ அரஹந்தாணம்-ஓம்ணமோ
ஸித்தாணம், ஓம்ணமோ ஆரியாணம்
ஓம்ணமோ ளேயோ ஸவ்வ ஸாஹுணம்"

என்பவையேயாம். இவை முறையே அருகர், சித்தர். ஆசிரியர், உபாத்தியாயர், சாதுக்கள் என்னும் பஞ்ச பரமேஷ்டிகளை வணங்கும் பஞ்ச நமஸ்கார மந்திரமாகும். சமணர்களது பெயர்களும் தனித்தமிழாகாது, வடமொழிச் சிதைவாய் விளங்குவனவேயாம். புனைந்துரையால் மிக்க தமிழரது பெயர்கள் போலாது பொருள் ஆழமின்றி வெற்றெனத் தொடுக்கப் பட்டிருந்தன. இவற்றை எல்லாம் கண்டு நகையாடுகின்றார் சம்பந்தர்.

ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாப்,
பாகதத் தொடிரைத்துரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா
மாகதக் கரிபோல் திரிந்து புரிந்து நின்றுணும் மாசுசேர்,
ஆகதர்க் கெளியேனலேன் திருவாலவா யரனிற்கவே.

ஆகமும் மந்திரங்களும் நன் மொழியாகிய (சங்கதம்) வடமொழியில் உள்ளன. அவற்றின் சிதைவாக (பங்கம்) ப்ராக்ருத மொழி (பாகதம்)