உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


இவர்கள் உடையைத் துறந்தும் நாணமேலீட்டால் தடுக்கால் உடல் மறைப்பதை முன்னரே கண்டோம்.

வானுயர் தோற்றம் எவன்செய்யும்? தன்நெஞ்சம்
தானறி குற்றப் படின்.

இவர்களே தம் ஒழுக்க நிலையின் இழிவை அறியாரோ? இன்னோருக்கு உணவின்மேல் இருந்த பற்று நகைப்புக்கே இடமாயது. ஒரு வேளையே உண்டு, பட்டினி கிடப்போர்கள், இரவில் உண்ணா நோன்பு பூண்டு ஒழுகுகையில், "எப்போது பொழுது விடியுமோ" என்றே எதிர்பார்ப்பர். அங்ஙனம் விடிந்ததும் இத் துறவிகள் கண்ணும் கழுவாது கஞ்சிமேல் நாட்டமாய் ஓடினார்களாம்.

“கண்தான் கழுவா முன்னே ஓடிக் கலவைக் கஞ்சியை
உண்டாங்கவர்கள்”

"கஞ்சி நாட்காலே - ஊணாப்
பகலுண்டோதுவார்கள்" (1. 98, 10. 1)

எனப் பாடுகின்றார் சம்பந்தர்.

இவர்கள் ஒரு வேளை உண்டாலும், வேளை தவறாது உண்டு கொழுத்த உடலினர் என அவர் காட்டுகின்றார்;

“போதியர்கள் பிண்டியர்கள்
போது வழுவா வகையுண்டு ஓதியவர்,”

என்று பாடுகின்றார்; உண்டிமேல் நாட்டமாய் உடலைக் கொழுக்க வைக்கின்றனர் என்றும் பாடுகின்றார்.

4