உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50


“மாகத கரிபோற் றிரிந்து புரிந்து நின்றுணும்
ஆகதர் வீங்கிய உடலினர்.”

‘பண்டியைப் பெருக்கிடும் பளகர்’
'உண்டி வயிறார்'
‘அடிசில் உள்கி வருவார்’

                     ‘கஞ்சி
நேசடைந்த ஊணினாரும்’

என வருதல் காண்க. உண்டியே நாட்டமாய் நிற்றலால் அறிவு நிலை கலங்கியவர்கள் என்றும் அவர் எடுத்துக் காட்டுகின்றார்.

‘பிண்ட முன்னும் பிராந்தர்’

என வருதல் காண்க.

கொல்லாமையைப் பேரறமாகக் கொண்ட இவர்கள் கொலைக்கு அஞ்சினார் இல்லை. புலாலுண்ணப் பின் தயங்கினார் இல்லை. புலாலுண்டு வந்த தமிழர் நிலை எவ்வாறாயது? சம்பந்தர் போன்ற பெரியோர், சமணர்களிடம் படும் நல்லொழுக்கங்களை யாவரும் கைப்பற்றினால்தான் தமிழ்க்கொள்கை சிறக்கும் என்பதை எடுத்துக் காட்டித் தூவுணாவையே எங்கும் பரப்பினர்.

“ஊனொடு உண்டல் தீது” என
“ஊனொடு உண்டல் “நன்று” என
ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான்,
வானொடொன்று சூடினான் வாய்மையாக மன்னி நின்று
ஆனோ(டு) அஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்மினே.

பழைய வழக்கத்தைப் பின் பற்றி ஊனொடு உண்ணுதல் நல்லதே எனச் சிலர் கூறினர்;