உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74


என்றும் நம்பியாண்டார் பாடுகின்றார். திரு ஞான சம்பந்தர் திருத்தொகையிலும்,

பாழியமணைக் கழுவேற.

என்று அவர் பாடுகின்றார்.

நமக்கு எட்டிய நூல்களில் முதன் முதலில் நம்பியாண்டார் நம்பியே இதனைப் பாடுகின்றார்; ஆதலின், அவர் புனைந்துரை அனைத்தையும் இங்கே தொகுத்துக் கூறுகின்றோம்: "கூடல் நகரில், சுற்றிலும் உள்ள எண்குன்றங்களின் நின்று குழுமிவந்த அருகரோடு, தமிழ் வழக்கிட்டு வென்று, அவர்கள் வலிதொலையக் கழுவேற்றி அவர்கள் செங்குருதி ஆறாகப் பெருகி ஓடச் செய்தனர் சம்பந்தர்" என்பதே நம்பிகள் பாடும் கதை. புனல் வழக்கும் அனல் வழக்கும் வெப்ப மொழிக்கும் வழக்கும் இவர் பாடுகின்றார். பின்வந்த பெரிய புராணக் கதையை ஆராய்வதற்கு முன், நம்பிகள் கதைப்படி, சம்பந்தரே அமணர்களைக் கழுவேற்றினார் என்பது தெளிவாதலைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். உலாவில் வரும் பெண்கள் சம்பந்தரை ஒருவகையில் கன்மனக் கொடியோன் என்ற குறிப்புத் தோன்ற இகழ்வதையும் இங்கு நாம் உய்த்து நோக்குதல் வேண்டும். திருத்தொண்டத் திருவந்தாதியின் சார்பு நூலாகப் பெரிய புராணம் பாடவந்த சேக்கிழார், அவ்வந்தாதியில் காணக் கிடக்கும் கதை ஒன்றையே அன்றித் திருஞான சம்பந்தர் திரு