பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 றனர். இவர்களையெல்லாம் காட்டுழி, சாத்தனர். அவர்கள் வழியே நாடுகள் வாழ்ந்த நெறியினையும் நிலையினையும் காட்டுவதோடு அவரவர் தனி வாழ்வினையும் சுட்டிக் காட்டி, அவர்களும் தத்தம் வினைவழியே நின்று நல்லறம் அல்லறம் ஆகியவற்றின் பயனை அனுபவிக்கும் திறன் காட்டி, அவற்றின் வழியே அரசியலை மட்டுமன்றி, தனி மனிதனின் வாழ்வியலையும் சமுதாய வாழ்வியலையும் தொடர்பு படுத்தி விளக்கிக் காட்டி,நம் சமுதாய அமைப்பு எப்படி இருக்க வேண்டும் எனச் சுட்டுகிருர். சாத்தனர் காட்டும் பிற நாடுகள் பலவற்றையும் சாத்தனர் காட்டுகிருர் என்று கண்டோம். அவற்றுள் ஒன்று அங்க நாடு ஆகும். மணி மேகலை, மாதவி, சுதமதி. ஆகியோர் பழம்பிறப்புக்களைக் கூறும்போது அவர்கள் அந்த நாட்டு மன்னைெடு கொண் டிருந்த தொடர்புகளையும் பிறவற்றையும் கூறுகிறர். அதன் தலைநகரம் கச்சய நகரமெனப் பேர்பெறுகிறது. 'முந்தை முதல்வி முதியோ ளிருந்த குச்சரக் குடிசை” என்ற அடிகளில், சம்பாபதி இருந்த கோயிலைக் குறிக்கும் போது, குச்சரம், என்பதைக் கூர்சரம் என ஆக்கித் தற்கா லத்திய கூர்ஜ்ஜர நாடெனக் கொள்ளுகின்றனர் சிலர். இக் கொள்கையைக் கொள்ளும் டாக்டர் ஐயர் அவர்கள் வாதத் தையும் பிறர் கூற்றுக்களையும் டாக்டர்கிருஷ்ணசாமி ஐயங் கார் அவர்கள் தக்க காரணங்கள் காட்டி மறுப்பதோடு, ! அவ்வாறு கொள்வது மணிமேகலையைக் கி.பி. ஆரும் நூற்ருண்டுக்குப் பின் தள்ளும் அவல நிலையைத் தோற்று விக்கும் எனத் திட்டமாகக் காட்டுகிறர். கூர்ச்சர மக்கள் வெளிநாட்டவர்களென்றும் அவர்கள் கி.பி. ஆரும் நூற்ருண்டிற்குப் பின்னரே இந்தியா வந்தனர் என்றும் 1. Manimekalai in its Historicni Settings.