உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102. அவர்கள். இதே பெயரில் இலங்கைத் தீவின் மத்தியில் ஒரு மலை இருக்கிறது. இதிலும் புத்த தேவனின் அடிச்சுவடு பொருந்தியுள்ளதென்பர். எனினும் மகத நாட்டு மலைக்கே இவ்வரலாறு பொருந்தியாக வேண்டும். பின் அசோகர் காலத்தில் பெளத்தம் இலங்கையில் பரவிய காலத்து அந்நாட்டு மக்கள் தம்மொடு புத்தரைத் தொடர்பு படுத்திக்கொள்ள அவர் பல்லாகிய கண்டி யைக் கொண்டுவந்து வைத்துக் கண்டி என்றே பேரூரையே உண்டாக்கியமை போன்று, புத்த தேவனுடைய பாதங் களை இம்மலையில் பொறித்துப் பாதபங்கய மலை என அமைத்துக் கொண்டார்கள் என்பது பொருந்தும். மேலும் இம்மலை புத்தர்களுக்கு மட்டுமின்றி ஆண்டுள்ள கிறித்த வர், சைவர் ஆகியோருக்கும் ஆதாம் உச்சி சிவைெளி பாதமலை என்ற வகையில் முக்கியமாகக் கொள்ளப் பெறுகின்றது. . இவ்வாறு சாத்தனர் தம் மணிமேகலைக் காப்பியத்தை இமயமலை தொட்டு அதனடியிலுள்ள உத்தர மகதம் தொடங்கி, தெற்கே தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பாலுள்ள இலங்கை, மணிபல்லவம், நாகநாடு, சாவகம் ஆகிய நாடு கள் வரையில் உள்ள எல்லா நாடுகளையும் உள்ளடக்கி, அவற்றுளெல்லாம் தம் சமயம் ஆதிக்கம் செலுத்தி ஓங்கி இருந்ததென்பதை நமக்கெல்லாம் தெளியவைக்கிருர், சில நாடுகளை இவர் தீவகம் என்றே குறிப்பிடுகிருர். நம் பாரத நாட்டுக்கே சம்புத் தீவகம் என்ற பெயர் உண் டல்லவா? ஒரு காலத்தில் இது தனித் தீவாக இருந்து, இம யம் கடலுள் ஆழ்ந்த காலத்தில் சிறந்து விளங்கி, பின் பிற நிலப்பகுதிகளோடு இணைந்தது என நில நூலாய்வாளர் கூற்றினை ஒத்து நோக்கின் இப்பெயர் பொருந்தும் எனக் கொள்ள வேண்டியுள்ளது. இச் சம்புத் தீவகம் நிற்க, இரத்தின தீவகம், இலங்கா தீவகம், சிறுதீவு இரண்டாயி ரம், பெருந்தீவு நான்கு, மணிபல்லவத் தீவு முதலியவை 1. மணிமேகலை உ.வே.சா. பதிப்பு பக். 486