உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 என்று கூறித் தனக்கும் கோவலனுக்கும் இறுதிப் பிறவிகள் அங்கே நிகழும் என அத்தெய்வமே கூறியதாகக் குறிக் கின்ருர். கலிங்க நாட்டையும் சாத்தனர் குறிக்கின்றர். இது, கோவலன் முந்தைப் பிறப்பை இளங்கோவடிகள் கூறி யாங்கு, கண்ணகி மணிமேகலைக்குக் கூறியவகையில் காட்டப் பெறுகின்றது. காந்தார மென்னும் பெருநாடும் அதன் ஒரு பகுதியாகிய பூர்வ நாடும் அதன் தலைநகராகிய இடவய நகரமும் மணிமேகலையின் முந்தைப் பிறப்பைக் காட்டும் வகையில் பீடிகை கண்டு பிறப்புணர்ந்தபோது விளக்கப் பெறுகின்றன. ஆயினும் அவை நில நடுக்கத் தால் அழிந்தன என்கின்றர். அந்நகரத்தரசன் அவந்தி நகரம் செல்லும்போது காயங்கரை என்ற ஆற்றின் கரையில் தங்கியதாகவும் குறிக்கின்றர். இவையெல்லாம் வட இந்திய எல்லையில் உள்ள பகுதிகளாகும். சாவக நாடு, நாக நாடு முதலியன தமிழ்நாட்டினை ஒட்டிய நாடுகளைக்கண்டோம். இந்நாடுகளை யன்றி துடித லோகம், வித்தியாதர உலகம் முதலிய வேற்று நாடு களையும் உலகம் என்ற பெயராலே குறிக்கின் ருர். இந் நாடுகளைப் பற்றிக் கூறும் போதெல்லாம் அங்கங்கே உள்ள நகரங்கள், ஆறுகள், மலைகள், அவற்றுள் வாழும் முனிவர்களின் பெயர்கள் ஆகியவைபற்றிய குறிப்புகளும் கூறப்பெறுகின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றை நாம் கண்டோம். மலைகளில் முக்கியமானது சமந்தம் என்றும் கூறப்பெறுவது. இம்மலை மகத நாட்டுத் தலைநகரம் இருந்த இராசக்கிருக நகரத்தின் சமீபத்தில் உள்ளது என்றும் புத்த தேவன் எல்லா உயிர்களுக்கும் தரும சிந்தையை உண்டாக்க நினைத்து, அவைகளெல்லாம் கேட்கும்படி இதன்மேல் நின்று தருமோபதேசம் செய்தபொழுது அவன் பாதச்சுவடு தங்கப் பெற்றமையின் இது "பாத பங்கயமலை' எனப் பெயர்பெற்றது என்றும் கூறுவர் ஐயர் 7