உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 வதானல், அதில் பயில்வோர் உள்ளத்தைத் தொடும் பல அமைப்புக்கள் இருக்க வேண்டுமன்ருே? சாத்தனர் இந்த உண்மையை உள்ளத்தில் வைத்தே காப்பியத்தைச் செய்கின்ருர். இந்நூலில் காதல் வாழ்வு இன்றேனும் அக் காதலை விளைக்கும் மகளிர் நிலை காட்டப் பெறுகிறது. பெண்ணை வெறுக்கப் பெண்ணே அறம்கூறும் அளவில் இந்நூல் செல்லுகின்றது. எல்லா நலமும் பெற்ற எழில் நலம் வீணுகிக் கெடும் நிலையைச் சாத்தனர், சித்திராபதி வழி ஒரோவிடங்களில் உணர்த்துகின்ருர் எனினும், மணி மேகலையின் உள்ளத் துறவையே நூல் முழுதும் காட்டு கிருர்; எனினும் மணிமேகலையின் அழகினைத் தேவை யான இடங்களில் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அதிலும் ஒரு பெண்ணைக்கொண்டே அவள் அழகை இயற்கை அழகோடு இணைத்துக் காட்டும் திறன் போற்றற்குரியது. சாத்தனரும் இளங்கோவும் சிலம்பினைப் பாடிய இளங்கோவடிகளுக்கு, கோவலன் கண்ணகியின் சில்லாண்டிலமைந்த காதல் வாழ்வினை விளக்க வாய்ப்பு வருகிறது. அதில் அவர் மயிலையும், அன்னத்தையும், கிளியையும் பிற இயற்கைப் பொருள் களையும் காட்டிக் காட்டிக் கண்ணகியின் நடை, சாயல். மொழி, பிற சிறப்பியல்புகளையெல்லாம் கோவலன் வழியே சுட்டுகிறர். ஆனல் சாத்தனர் சுதமதி என்ற பெண் வாயிலாகவே மணிமேகலையின் அழகினை இயற்கையொடு பொருந்தக் காட்டுகின்றர். ஆயினும் காண்பார் கூற்ருக அவர் தம்முள் பேசும் சொற்களும் மணிமேகலையின் அழகை இயற்கைப் பொருள்களுடன் பொருத்தும் தன்மையை விளக்குகின்றன. புகார் நகரின் தெரு வழியே மலர் கொய்யச் சென்ற மணிமேகலையைக் கண்ட அந் நகர மக்கள், 'அணியமை தோற்றத்து அருந்தவப் படுத்திய தாயோ கொடியள் தகவிலள் ஈங்கிவள் மாமலர் கொய்ய மலர்வனம் தான்புகின்