உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 நல்லிள வன்னம் நாணு தாங்குள வல்லுரு கொல்லோ மடந்தை மென்னடை? மாமயில் ஆங்குள வந்துமுன் நிற்பன சாயல்கற் பனகொலோ தையல் தம்முடன்? பைங்கிளி தாமுள பாவைதன் கிளவிக்கு எஞ்சல கொல்லோ இசையுரு வல்ல?" –3/149-157 எனப் போற்றப்பெறும் அடிகள், "மாயிரும் பீலி மணிகிற மஞ்சைகின் சாயற் கிடந்து தன்கா னடையவும் அள்னம் நன்னுதல் மென்னடைக் கழிந்து நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும் அளிய தாமே சிறுபசுங் கிளியே குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தகின் மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மடங்டை மாதுகின் மலர்க் கையின் நீங்காது உடனுறைவு மரீஇ ஒருவா வாயின." -சிலம்பு. 2158-61 என்று கோவலன் கண்ணகியைப் பாராட்டும் காதல் பொதிந்த சி ல ம் பி ன் அடிகளோடு உடன்வைத்து எண்ணும் தகையனவல்லவோ? சிலம்பின் முறை தனிமையில் உள்ள தலைவன் தலைவியைத் தழுவிப் பேசும் நிலையில் அமைய மேகலையின் முறை கண்டோர் கூற்ருக, மணிமேகலையின் காதில் விழாத வகையில் அமைகின்றது. எனவே, சொல்லும் முறையில் மாறுபாடு காண்கின்ருேமே ஒழியப் பொருளமைதி ஒன்றுதானே! சாத்தருைம் சம்பந்தரும் மலர் கொய்யச் சோலையில் மணிமேகலையும் சுதமதி யும் புகுகின்றனர். அங்குள்ள இயற்கைக் காட்சி சாத்தனர் உள்ளத்தைத் தொடுகின்றது. பொழிலையும் பொய்கையையும் சுதமதி மணிமேகலைக்குக் காட்டுகிருள்.