பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 அன்னமும் மயிலும் தாமரையும் பிறவும் மணிமேகலையின் எழிலுறுப்புக்களையும் பிற வற் றையும் சாத்தனருக்கு நினைவை ஊட்டுகின்றன. எனினும் அவற்றைக் காத லுணர்வோடு காட்டுநிலையில் காவியப்போக்கு இல்லை. எனவே, சுதமதி வாயிலாக, 'பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்கு இருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில் குழல் இசைத் தும்பி கொளுத்திக் காட்ட மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய வெயில்நுழைபு அறியாக் குயில்நுழைப் பொதும்பர் மயிலாடு அரங்கின் மந்திகாண்பன காண்' –4/1-6 எனச் சாத்தனர் அச்சோலையின் வளத்தை முதலில் காட்டுகின்ருர். இதில் இயற்கையின் நலம் நன்கு காட்டப் பெறுகின்றது. இவ்வடிகள், "வரைசேரு முகில்முழவ மயில்கள் பல கடமாட வண்டுபாட விரைசேர் பொன் இதழி தர மென்காந்தள் கையேற்கு r மிழலை யாமே" -1||132-4 என்ற ஞானசம்பந்தர் தம் அடிகளோடு ஒத்து எண்ணத் தோன்றுகின்றதன் ருே? தெய்வ நெறியையும் சமய மரபை யும் பாடவந்த இந்த இரு புலவர்களும் இவ்வாறு தம்மை மறந்து, இயற்கையில் ஒன்றும் காட்சி போற்றத்தக்க தன்ருே? சாத்தருைம் கம்பரும் சுதமதி மேலும் அவ்வுவவனச் சிறப்புக்களையெல்லாம் மணிமேகலைக்குக் காட்டுகிருர், "மாசறத் தெளித்த மணிநீ ரிலஞ்சி பாசடைம் பரப்பில் பன்மலரிடைகின்று ஒருதனி ஓங்கிய விரைமலர்த் தாமரை