பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 அரச அன்னம் ஆங்கினி திருப்ப கரைகின் ருலும் ஒருமயில் தனக்கு கம்புள் சேவல் கனகுரல் முழவா கொம்பர் இருங்குயில் விளிப்பது காணுய்! இயங்குதேர் வீதி எழுதுகள் சேர்ந்து வயங்கொளி மயங்கிய மாதர்கின் முகம்போல் விரைமலர்த் தாமரை கரைகின் ருேங்கிய கோடுடைத் தாழைக் கொழுமட லவிழ்ந்த வால்வெண் சுண்ணம் ஆடியது இதுகாண்! மாதர் கின்கண் போதெனச் சேர்ந்து தாதுண் வண்டினம் மீதுகடி செங்கையின் அம்சிறை விரிய அலர்ந்த தாமரைச் செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டாங்கு எறிந்தது பெருது இரை இழந்து வருந்தி மறிந்து நீங்கும் மணிச்சிரல் காண்” –4/7-24 என்று மணிமேகலையின் செவ்விய அழகின் நலத்தை யெல்லாம் இயற்கை நலத்தோடு சேர்த்துக் காட்டிச் சுதமதி வாயிலாகவே நமக்கு இயற்கை நலத்தையும் மணி மேகலையின் அழகையும் ஒருசேரக் கண்டு மகிழும் வகை யில் வாரி வழங்குகிருர் சாத்தனர். சாத்தருைக்குப் பல நூற்றண்டுகளுக்குப் பின்வந்த கம் ப ன் இக் காட்சியையெல்லாம் கண்டிருக்கிருன். இங்கே மணிமேகலை தன் இளநலமும் எழிலும் பொங்கச் சோலையுள் புகும் நிலையில் சாத்தனர் அவளது அழகினை இயற்கையொடு ஒப்பிட்டுக் காட்டுகிருர். அவள் சோலை யில் புக்கபின் அதே நிலையில் வெளிவரவில்லை. பின் மணிமேகலா தெய்வம் வான்வழியே மணிபல்லவம் கொண்டுசென்று, பழம் பிறப்புணர்த்த, திரும்பவும் புகாரில் வரும்போது முற்றும் துறந்த முனிவரர் நிலையி லேயே வருகிருள். எனவே, இவ்விடம் அவள் செவ்வி யைச் சாத்தனர் காட்டுவது இயல்பு. இப்படியே கம்பரும் அடுத்து இராவணனல் விண்வழி மணிபல்லவத்துக்கு