உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 இயற்கையில் கற்பனை சாத்தனர் புகார் நகரைக் காட்டும் நெறியில் இளங்கோவடிகளையும் விஞ்சுகிருர். புகாரினை ஒரு பெண் ளுகவே காட்டுகிருர், ஒரு பெண்ணுக்கு அமையவேண் டிய அணிகள் அனைத்தையும் இயற்கையோடு சார்த்திக் கூறிக் காட்டுவதோடு, அதன் உயர்ந்த மாளிகையோடு கூடிய சிறப்பினைச் சுட்ட, கிழக்கிலும் மேற்கிலும் தோன்றி யும் மறைந்தும் நிற்கும் இருசுடர்களையும் அப் புகார்ப் பூங் கொடியின் காதிலணியும் தோடுகளாகக் காட்டுகின் ருர் இந்தநிலை போற்றகூடிய ஒன்ருகும். வெறும் உருவமாக மட்டும் அமைவதோடன்றி இவ்வடிகள் புகார் நகரின் எல்லா ஏற்றங்களையும் எடுத்துக் காட்டுகின்றன எனலாம். இந்த அடிகளின் சிறப்பை முன்னரே கண்டோம். ஈண்டும் காட்டக் கடமைப்பட்டுள்ளோம். 'புலவரை இறந்த புகாரெனும் பூங்கொடி பன்மலர் சிறந்த நன்னீர் அகழி புள்ளொலி சிறந்த தெள்ளரிச் சிலம்படி ஞாயில் இஞ்சி நகைமணி மேகலை வாயில் மருங்கியன்ற வான்பனைத் தோளி தருகிலை வச்சிரம் என இரு கோட்டம் எதிரெதி ரோங்கிய கதிரிள வனமுலை ஆர்புனை வேந்தற்குப் பேரள வியற்றி ஊழி எண்ணி நீடுகின் ருேங்கிய ஒருபெருங் கோயில் திருமுக வாட்டி குணதிசை மருங்கில் சென்று வீழ் கதிரும் வெள்ளிவெண் தோட்டொடு பொன்தோ டாக எள்ளறு திருமுகம் பொலியப் பெய்தலும்' -5/109-122 என்று புகாரெனும் பூங்கொடியின் அழகிய பெண் தன்மை யினையும் அவள் அணிகளையும் பிறவற்றையும் கூறுவ தோடு, அவை நகரில் அமைந்துள்ள சிறப்பினையும், இக்