உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115, காலம் மாலைக்காலம் என்பதையும் நிறைமதி நாள் என் பதையும் கூட நன்கு விளக்குகிருர் அன்ருே! இத்தகைய புகார் நகரத்தில் பல்வேறு பொழுதுகள் எவ்வெவ்வாறு கழிகின்றன என்பதைச் சாத்தனர் காட்டும் திறன்கண்டு மகிழத்தக்கதாகும். அவற்றுள் ஒன்று காலைப் பொழுதைக் காட்டுவதாகும். தனிப்பட்ட சுதமதி காலை யில் எழுந்து, மாதவியிடம் வந்து மணிமேகலையைப் பற் றிக் கூறுமுன் அக் காலையின் இயல்பினையும் அக்காலத்தே எழும் பல்வேறு ஒலிகளையும் பிறவற்றையும் சாத்தனர் தெரகுத்துக் காட்டும்போது (துயிலெழுப்பிய காதை வரி கள் 111/125) நாமும் எழுந்து நம் கடமை ஆற்றத் தொடங் குகின்ருேம். இப்பகுதியில் சாத்தனர் இரவெல்லாம் ஊர்க் காவல்துறை நின்ற அக்காவலர் உறங்கப்போகும் நிலையை முற்கூறி, இரவில் அப்பெருநகர் எவ்வாறு நற்காவலர் எல் லைக்குள் அவலமற்று இருந்ததெனச் சுட்டுகிருர். பாட்டி சைத்துத் தோற்கருவியாளர் நல்லிசை முழக்குவதையும் கொடையாளர் காலை முரசியம்பக் கடைவாயில்தொறும் வாரி வழங்கும் சிறப்பையும் சிலேடை எனக் கொள்ளு மாறு இறுதியில், 'குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ' –7/123-4 என அழகுறக் காட்டுகிருர். காஞ்சியின் சிறப்பைச் சாத்தனர் பல இயற்கை வளம் பொதுள, இலக்கியச் சுவை பொருந்தக் காட்டும் திறன் எண்ணற்குரிய ஒன்ருகும், இயற்கையாக அமைந்த கவி னும் மக்களின் செயற்கை நலத்தால் பெறும் செழிப்பும் ஆங்கே நன்கு திகழ்கின்றன. காஞ்சியின் அகழியை இந் திரதனு’ எனக் குறிக்கின்றர். வானவில்லில் எழுவகை நிறங்கள் சிறப்பன போன்று ஈண்டும் எழுவகை நிறங்கள்