பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ஈதல் கொடை என்பதால், அவ்விரண்டினையும் - காட்ட வும் சொல்லவும் வல்லனவாம் இரண்டினையும் - காட்டாத ஒவியத்தை உவமை காட்டி. அந்த ஒவிய நிலையில் அருள் நலம் சான்ற ஆதிரை பிச்சையிட்டதை அழகுறக் காட்டி, அவள் வள்ளுவர் காட்டிய அறத்தினும் தெள்ளிய உள்ளத் தாள் என்பதை விளக்கிவிட்டார். மேலும் பேசாநின்ற மணிமேகலையின் முன் ஆதிரையைப் பேசவைத்துப் பிச்சை இடவைக்கின்றர். ஆம் இந்தக் காதைக்கே ஆதிரை பிச்சையிட்ட காதை’ என்றே பெயர் இருப்பதால், நானும் இதைப் பிச்சை என்றேன். அவ் ஆதிரையின் வாக்கிலே அவளுடைய தெளிந்த-பரந்த-சிறந்த இல்லற வாழ்வின் உச்சியில் அமைந்த பண்பு நலத்தைக் காட்டுகிருர். அவள் கிளவியே 'துயரறு' கிளவி என்கிருர். மணிமேகலை யைத் தொழுது வலங்கொள்வதன்வழி இல்லறத்தார் விருந்தினரை ஏற்கும் மரபினையும் காட்டுகின்ருர்; "தொழுதுவலங் கொண்டு துயரறு கிளவியொடு அமுத சுரபியின் அகன்சுரை கிறைதர பாரக மடங்கலும் பசிப்பிணி அறுகென ஆதிரை யிட்டனள் ஆருயிர் மருந்தென்" -16/132-135 எனக்காட்டி, அவள் இட்ட அந்த உணவே உலகப்பசி முழுமையும் நீக்க மணிமேகலைக்கு உதவியாயிற்று எனச் சுட்டுகிறர். அதை உணவு என்றும் சோறு என்றும் கூருது 'ஆருயிர் மருந்து' என்றே காட்டுகிருர்; ஆம்! உயிரை வாழவைக்கும் சாவா மருந்தன்ருே இது. பிறர் சாவா மருந்தெனப் பிறவற்றைக் கூறினும், இவர் அவர்களினும் ஒருபடி மேலே சென்று ஆருயிர் மருந்து எனவே உணவினைக் கூறுகிறர். உவமை காண வந்த விடத்தில் நல்லாராகிய ஆதிரையை எண்ணி, அவர் பண்பு நலத்தால் பற்றப்பட்டு வேறு நெறிச் சென்ருேமெனினும் இவை ஈண்டு எண்ணத் தக்கவையன்ருே!