உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 சாத்தனர் இந்த அளவோடு அள்றி மற்ருெரு உவமை முகத்தானும் அந்த அமுதசுரபியிலிருந்து உணவு-சோறு உலகை உண்பிக்கிறது என்பதையும் காட்டுகின் ருர், 'உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே என காட்டி, அவ்வுணவளித்தலாகிய அறமே சிறந்த ஒன்று என்பதை நூல் முழுதும் சுட்டும் ஆசிரியர், அப்பணி தொடங்கப் பெறும் இந்த நிலையிலே அந்த அறத்தை உவமை வாயி லாகவே விளக்கிக்காட்டுகின்ருர். ஆதிரை நல்லாளையும் நினைக்கிருர்; அவளிட்ட பாத்துரண் தன்மையை-எண்ணு கிருர்; எழுதுகிறர். . 'பத்தினிப் பெண்டிர் பாத்துண் ஏற்ற பிச்சைப் பாத்திரப் பெருஞ்சோற் றமலை அறத்தின் ஈட்டிய கன்பொருள் அறவோன் திறத்துவழிப் படுஉம் செயற்கை போல வாங்குகை வருத்த மன்னுயிர்க் களித்துத் தான் தொலை வில்லாத் தகைமை'உடைத்து -17/1-6 என்பன அவரடிகள். மேலும் உலக அறவியில் மணிமேகலை நின்று மக்களை உண்பித்த நிலையினை, "வெயில்சுட வெம்பிய வேய்கரி கானத்து கருவி மாமழை தோன்றிய தென்ன பசிதின வருந்திய பைதல் மாக்கட்கு அமுத சுரபியொடு ஆயிழை தோன்றி' -1791-94 உணவினை அளித்தாள் எனக் காட்டுகின்றர். ஆம்! அவள் தோற்றம், வாடிய பயிருக்கு மழை என அமைந்தது. இன்னும் ஒரே உவமைநலம் கண்டு இப்பகுதியை முடிக்கலாம் உன எண்ணுகிறேன். மணிமேகலை பிறந்த குலத்தைப் பற்றி எண்ணுகிருர் சாத்தனர். சிறந்த குலப்