பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 யில் இருந்து இன்பம் தரவேண்டியவர் என்ற உண்மையை அடுத்த உவமையில் காட்டுகிறர். அதல்ை அக்குலத்தின் இழிதகைமை-பலரொடும் பொருள் கருதிச் சேரும் பொய்ம்மை முயக்க நிலை-புலப்படுகின்றதன்றே! அடுத்து வருகின்ற உவமை அ க் கு ல த் தார் கொடுமையை விளக்குகின்றது. தேன் இருக்கும் மலரில் தங்கி அத்தேனை முற்றும் உண்டு, பின் அதைத் திரும்பி யும் பார்க்காத வண்டுகளை உவமை ஆக்குகிறர். ஆம்! தம்மிடம் சிக்கிய ஆடவர் தம் பொருள் உள்ளவரையில் அவரொடு உடலால் கூடி இருந்தும் உளத்தால் வேறு பட்டும், பொருள் தீர்ந்தபின் அவர்களை வெறுத்தொதுக் கும் கொடுமையை விளக்குகிறர். நயனில் காலை வறும்பூத் துறக்கும் வண்டு என்றே தம்மைச் சித்திராபதி கூறிகொள் வதாகக் காட்டுகிரு.ர். கடைசியாகக் காட்டும் உவமை எண்ணத்தக்கது. மேலும் ஆதிரை நல்லாளைக் காட்டிய ஆசிரியர் திருவின் செய்யோள் போன்று' என்றும் ஒருதனி ஓங்கிய திருமலர்' என்றும் காட்டியவர், ஈண்டுக் கணிகையருக்கும் அதே திருமகள் செல்வியைக் காட்டுவது எண்ணத்தக்கது. ஆல்ை இங்கே அவர் காட்டும் முறையும் விளக்கும் திற னும் எண்ணத்தக்கன. செல்வம் சகடக்கால் போல வரும் ஒரு தன்மையினையே ஈண்டு அவர் குறிக்கின்ருர், அச்செல்வமும் நல்வினை உடையார்க்கே கூடும் ஒன்ரு கும். திருவின் தோற்றமோ தன்மையோ ஈண்டு உவமை யாகக காட்டப் பெறவில்லை. ஆனல் அவள் ஓரிடத்து நில்லாது சுழலும் நிலையினையே உவமையாகக் காட்டு கின்றர். அவ்வாறு செல்லுவதற்கும் அச்செய்யோள்மேல் குற்றஞ் சுமத்தவில்லை. அவரவர் வினையே அவள் செயலுக் குத காரணமாகின்றது எனவும் குறிக்கின் ருர். எனவே இரண்டிடத்தும் திருமகள் உவமையாகக் காட்டப் பெறினும் காட்டும் நிலையும் முறையும் வேறுபடுகின்ற