பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 தோடு, அவ்வவ்விடத்துக்கு ஏற்ற வகையிலேயே உவமை அமைவதைக் காண்கின்ருேம். இவ்வாறே வாழ்வில் கொள்ளவேண்டியவற்றையும் தள்ளவேண்டியவற்றையும் பல்வேறு உவமைகள் வழியே சாத்தனர் காட்டி நம்மை அல்லன நீக்கி நல்லன நோக்கும் நெறிக்கு ஈர்த்துச் செல்லுகிரும். சமயம் பற்றிய வகை களில் சாத்தனர் காட்டும் உவமைகள் எண்ணில. அவற்றையெல்லாம் ஈண்டுத் தொகுத்துக் கூறப்புகின் காலமும் இடமும் பொருந்தா என்ற நிலையில் அமைகின் றேன். இலக்கியத்திற்குச் சிறப்பாதலேயன்றி மேலும் அதே நிலையில் அம்மக்கள் வாழ்விற்கமைந்த பல நல் லியல்புகளையும் விளக்கும் சாத்தனர்தம் உவமைகள் என் றென்றும் மக்களால் போற்றற்குரியன வன்றே! உவமை அணி மட்டுமன்றி உருவகம் தற்குறிப்பேற்றம் போன்ற பிற அணிகளும் சாத்தனரால் ஆங்காங்கே எடுத்தாளப் பெறிகின்றன. நான் காலம் கருதி அவற்றுள் புகாது இந்த அளவோடு அமைந்து வேறு வகையில் அவர்காட்டும் நலம் காணலாம் என எண்ணுகிறேன். சாத்தருைம் வள்ளுவரும் சாத்தனர் தம் நூலில் அவருக்கு முன்னே வாழ்ந்த பல புலவர்தம் வாய்மொழிகளைப் போற்றியுள்ளார். சிறப்பாக வள்ளுவர்தம் வாய்மொழியைப் போற்றுவதோடு, அவ் வள்ளுவரைப் பொய்யில் புலவன்’ என்றும் குறளைப் "பொருளுரை' என்றும் போற்றுகின்ருர் இந்தக் குறளடி களே முன் கற்பினைப் பற்றிக் கண்டபோதும் எண்ணி ைேம். சதுக்கப் பூதத்தின் வாயிலாக இக்குறளை எடுத்துக் காட்டுகின்ருர் சாத்தனர். அவர் கூறிய அடிகள் இவை: "தெய்வங் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள் பொய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேருய்' –23/56-16