பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 நகையும் அவலமும் சாத்தனர் சிலவிடங்களில் வேடிக்கையாகவும் சில விடங்களில் கழிவிரக்கப்பட்டும் பல உண்மைகளை விளக்குகின்றர். சாத்தனர் சமணசமய நெறிகளுள் சில வற்றைக் கண்டிக்க நினைக்கிறர். அவர்தம் உடையற்ற தன்மை, காணு உயிர்க்கெனக்கொள்ளும் சில விரதங்கள், கழுவா உடம்பு இவைபற்றி எண்ணும்போது அவருக்கு வெறுப்பு ஏற்படுகிறது. சைனத் துறவிகளோ, அவைதாம் தம்மை உயர்த்துவன என எண்ணுகின்றனர். உண்மை யில் கண்ணிற் காணும் எண்ணற்ற உயிர்களின் துன்ப நீக்கத்துக்குப் பாடுபடாத அவர்களைப் பழிக்க நினைக் கிருர் சாத்தனர். அதற்கெனவே ஒரு களிமகனுகிய பாத்தி ரத்தை உண்டாக்குகிருர். தெருவழியே செல்லும் அம் முனிவனை அக் களிமகன் அழைத்துப் பேசுமாறு அமைக் கின்றர். உண்மையில் இப்பகுதி மணிமேகலையின் கதைக்குத் தேவை இன்றேனும் நகைச்சுவை விளைவிக்க வம் அதே வேளையில் சைனத் துறவிகளைத் தாக்கவும் இந்தத் தெருக்காட்சியைக் கற்பித்துக் கொள்ளுகிறர். அதில் கள் குடிப்பதால் வரும் இன்பத்தையும் அது குடிப்ப தால் கொடுமை ஒன்றுமில்லை என்றும் களிமகன் வாயிலா கவே வேடிக்கையாகச் சொல்லச்செய்து, அச்சைனர்தம் தேவையற்ற, காணு உயிர்களைக் கொல்லா விரத நோன் பினையும் மண்ணு மேனி முதலியவற்றையும் எள்ளி நகையாடுகின்றர். இதோ அவர் வாக்கு : "சிமிலிக் கரண் டையன் நுழைகோற் பிரம்பினன் தவலருஞ் சிறப்பின் அராந்தாணத் துளோன் நாணமும் உடையும் நன்கனம் நீத்து காணு உயிர்க்கும் கையற் றேங்கி உண்ணு கொன்போடு உயவல் யானையின் மண்ணு மேனியன் வருவோன் தன்னை “வந்தீர் அடிகள் நும்மடி தொழுதேன் எந்தம் அடிகள் எம்உரை கேண்மோ?