பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 அழுக்குடை யாக்கையில் புகுந்த நும்உயிர் புழுக்கறைப் பட்டோர் போன்றுளம் வருந்தாது இம்மையும் மறுமையும் இறுதியில் இன்பமும் தம்வயின் தருஉம் என் தலைமகன் உரைத்தது கொலையும் உண்டோ கொழுமடற் றெங்கின் விளைபூந் தேறலின் மெய்த்தவத் தீரே உண்டு தெளிந்து இவ்யோகத் துறுபயன் கண்டால் எம்மையும் கையுதிர் கொண்ம்' -3/86-10} என்று கூறி அத்துறவிக் கோலத்தையும் விரதத்தையும் தூய்மையற்ற உடலையும் பிறவற்றையும் களிமகன் வழியே விளக்கித் தனக்குச் சமண சமயத்தின் மேலிருந்த வெறுப்பினைக் காட்டிக் கொள்ளுகின்றர். இத்தகைய வெறுப்புணர்ச்சியே பிற்காலத்தில் பல்கிப் பெருகிப் பல சமயப் போராட்டங்களுக்கு இடந்தந்தது. பெருமன்ன கிைய மகேந்திரனுடைய, ஏழாம் நூற்றண்டில் சைன சமய ஏற்றத்தைப் போற்ற நினைத்து, காஞ்சித் தெருவில் பிற சமய வாதிகளை இழிவுபடுத்தும் மத்த விலாசப் பிரகசனம்’ என்னும் நாடகம், இச் சாத்தனர் கூற்றின் அடிப்படையில் அமைந்திருப்பதை ஒருவாறு உணர முடிகின்றதன்ருே! இத்தகைய நகைச் சுவை பொருந்திய காட்சியைக் காட்டிய சாத்தனர் அடுத்து ஒர் அவலக் காட்சியையும் நமக்குக் காட்டுகிறர். அக் காட்சியைக் காண்போர் வருந்துகிறர்கள் என்றும் கூறுகிருர். பாவம் - பித்துப் பிடித்துவன் செயல் கண்டு வருந்தாதென் செய்ய இயலும்? அப் பயித்தியம் வெள்ளலரி மாலையும் எருக்கம் பூ மாலையும் எலும்பு போன்ற குச்சிகளாகிய மாலையும் பூண்டு, சாம்பல் பூசி, சிதர் உடுத்து, கண்டதைப் பேசி வருகின்றதெனக் காட்டுவதோடு, பயித்தியச் செயல் களைச் செய்வதையும் குறிக்கின்ருர், 'கணவிர மாலையின் கட்டிய திரள் புயன் குவிமுகி ழெருக்கின் கோத்த மாலையன் சிதவல் துணியொடு சேணுேங்கு நெடுஞ்சினைத் ததர் வீழ்வு ஒடித்துக் கட்டிய உடையினன்