பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 நிலையின நன்கு விளக்கித் தான் மிக்க நல்லறம் விரும்பிய வகையினைக் காட்ட இறுதியில், - "மண்டமர் முருகின் களிறனை யார்க்கும் பெண்டிர் கூறும் பேரறி வுண்டோ கேட்டனை யாயின் வேட்டது செய்க" -18/140-142 என்று கூறி முடிப்பது எத்துணைப் பொருத்தமாக அமை கின்றது. அரசகுமரனுக்கு வேறு எப்படி அறிவுறுத்த முடியும்? சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்லி விட்டு, பிறகு ஆடவருக்குப் பெண்கள் கூற என்ன இருக்கிறது?’ என்ற விைைவயும் எழுப்பி, முடிவில் செய லாற்ற வேண்டிய அச் செயல்முறையை அவனுக்கே உரிமையாக்கிய திறன் சிறந்த ஒன்றன்ருே? ஒருவேளை வேறு வகையாகக் கூறியிருப்பின் அவன் அங்கேயே கொடுமை இழைத்திருக்கவும் கூடுமன்ருே! மேலும் வேட்டது செய்க" என்று கூறியதால் அவன் தன் சொற் கேளான் என்ற கருத்தும் பொதிந்து கிடக்கிறது. அதேைலயே அவள் காயசண்டிகை வடிவினைப் பெற்ருள். அவனும் கேளாது காஞ்சனல்ை வெட்டுண்டிறந்தான். உதயகுமரன் இறந்ததை முனிவர்கள் சோழ மன் னனுக்கு எடுத்துரைக்கச் செல்லுகிறர்கள். சென்றதும் நேரே உதயகுமரன் இறந்தான் என்ருே, அதற்குக் கார ணம் இவை.இவை என்ருே எடுத்துக்காட்டாது, வேறு வேறு பேசுகின்றனர். முதலாவதாக அவன் வேலும் கோலும் அருட்கண் விழிக்க' என வாழ்த்துகின்றனர். மேலும் அன்று நடந்த நிகழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக, முன் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளை-அவையும் அரசகுமர ரைச் சார்ந்த நிகழ்ச்சிகளாக எடுத்துக்காட்டுகின்றனர். "இன்றே அல்ல இப்பதி மருங்கில் கன்றிய காமக் கள்ளாட் டயர்ந்து பத்தினிப் பெண்டிர் பால்சென் றணுகியும்